ரெம்டெசிவிர் வாங்க… நேரு ஸ்டேடியத்தில் குவிந்த கூட்டத்தால் அதிர்ச்சி! திணறும் அரசுத் துறை!

remdesivir crowd 1
remdesivir crowd 1

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. இதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்து, அதனை வாங்கி வருமாறு கூறுகின்றனர்.

தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருவதால், இந்த மருந்தைப் பெற நோயாளிகளின் உறவினர்கள் பெரும் போட்டியிடுகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லாததால் வெளியில் சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர்கள் கட்டாயப் படுத்துகின்றனர். இதனால் அவர்களும் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டை வைத்துக் கொண்டு கடை கடையாகச் செல்கின்றனர். ஆனால் எந்த மருந்துக் கடைகளிலும் மருந்து இருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதே நேரம் கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பவர்களிடம் கூடுதல் விலை வைத்து ரெம்டெசிவிர் விற்பனை செய்யப் படுவதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த ஏப்.26ஆம் தேதி முதல் ரெம்டெசிவிர்மருந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இங்கே கூட்டம் அலைமோதியதால், மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இருப்பினும், கீழ்ப்பாக்கத்தில் மக்கள் கூட்டமாக வந்து குவிவதால், கீழ்பாக்கத்துக்கு பதிலாக, சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட படி இன்று மருந்து விற்பனை தொடங்கியது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 கவுண்டர்களில் இன்று காலை 9 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

அந்த அறிவிப்பனை அடுத்து அதிகாலை முதலே மருந்தை வாங்குவதற்கு கவுண்டர் முன் ஏராளமானோர் குவிந்தனர். மருந்து வாங்க இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் தனிநபர் இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் முண்டியடித்தனர். சிலர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிவதால், கூட்டத்தைக் குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories