08-02-2023 8:46 AM
More
  Homeஉரத்த சிந்தனைதிமுக., பிரமுகர் ஜாஹிர் உசேனின் ‘திருவரங்க’ அரசியல்!

  To Read in other Indian Languages…

  திமுக., பிரமுகர் ஜாஹிர் உசேனின் ‘திருவரங்க’ அரசியல்!

  rangarajan narasimhan and zahir hussain - Dhinasari Tamil

  “முஸ்லிம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் அவமானப்படுத்தப் பட்டேன்” – பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் குற்றச்சாட்டு – என்று செய்திகள் பரபரப்பாக ஊடங்களில் பகிரப் படுகின்றன. ஜாஹிர் உசேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். சமூகத் தளத்தில் தெரிவித்த இந்தக் குற்றச்சாட்டுக்கு… சமூகத் தளங்களில் சிலர் பதிலடி கொடுத்தனர்… அந்தக் கருத்துகளில் சில…

  கருத்து: ஜடாயு, பெங்களூர்

  சில வருடங்கள் முன்பு இந்த நபர் ஃபேஸ்புக் நண்பரானார். 2017 ஜலிக்கட்டு போராட்டத்திற்குச் சற்றுபின்பு அவரே நட்பு நீக்கமும் செய்து விட்டார். ஸ்ரீராமானுஜரைப் பற்றிய அவரது நாட்டிய நாடகம், திவ்யப் பிரபந்த பாசுரங்களில் அவருக்கு உள்ள ஈடுபாடு, புலமை ஆகியவற்றை நான் பாராட்டியிருந்தேன். இஸ்லாமியராக பிறந்தும் அந்த மதக்கோட்பாட்டின் விஷத்தன்மையையும், தீமைகளையும் உணர்ந்து அதிலிருந்து வெளிவந்து, நல்லோர் தொடர்பு மூலம் உண்மையாகவே விஷ்ணு பக்தியைக் கைக்கொண்டிருக்கிறார் என்றே எண்ணினேன். ஆனால் விரைவிலேயே இவரது தீவிர தி.மு.க குடும்பத் தொடர்புகளும், மோசடித்தனமும் தெரியவந்தன. வெளிப்பார்வைக்கு திருமண், பாசுரம், வைஷ்ண பரிபாஷை எல்லாம் இருந்தாலும் அடிப்படையில் ஒரு மூன்றாந்தர திமுக தொண்டனின் மனநிலை தான் இவருடையது என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்தார். ஈவேரா பெரியாரை வானளாவப் புகழ்ந்தும், பிரதமர் மோதி, பாபா ராம்தேவ், ஸ்மிருதி இரானி ஆகியோரை வக்கிரமாகவும் ஆபாசமாகவும் சித்தரித்தும் பதிவுகள் போட்டார். பசுக்களைக் குறித்து “சாணி, மாட்டு மூத்திரம்” என்று வழக்கமான இந்துவெறுப்பு மொழியில் பேசினார். இந்துவிரோத திமுக என்ற பிரசாரம் ஓங்கி இருக்கையில் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரத்தை காப்பியடித்து “மணிவண்ணா உன் திருவடியும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு காப்பு” என்று கூசாமல் எழுதினார். இந்து, இந்துமதம் ஆகிய சொற்களை எப்போதும் ஏளனமாகவும் அவமரியாதையுடனும் குறிப்பிட்டு வந்தார். இருப்பினும் சில வைஷ்ணவர்கள் இவர் ஒரு பாகவதர், பக்தர் என்று இவர்மீது நல்ல எண்ணம் கொண்டிருந்ததால், இவரைப் பொதுவில் விமர்சிக்காமல் விடுத்தேன்.

  இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. “இந்துக்கள் அல்லோதோர் வரக்கூடாது” என்று தெளிவாக அறிவிப்பு உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் இவர் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறார். இது மிகச்சரியான நடவடிக்கை. மற்ற விமர்சனங்களைத் தாண்டி, இந்த விஷயத்தில் இதனைச் செயல்படுத்திய ரங்கராஜன் நரசிம்மன் பக்கமே எனது முழு ஆதரவும்.

  இதில் கொடுமை என்னவென்றால் ஜாகிர் உசேன் ர.ந. மீது புகார் கொடுத்துள்ளாராம். அவரது தி.முக செல்வாக்கு எந்த அளவு இருக்கிறதென்றால், இ.அ.துறை அமைச்சர் சேகர் பாபு “முதல்வருடன் கலந்துபேசி இதுகுறித்து முடிவெடுக்கப்படும்” என்கிறார். கோயிலுக்குள் ஒரு இஸ்லாமியரை அனுமதிப்பதற்கு முதல்வர் வரை ஆலோசனையாம். அடேங்கப்பா. கூடவே, “மத ரீதியில் கோயில் விஷயங்களை அணுகமுடியாது” என்கிறார் அமைச்சர். பின் எந்த ரீதியில் அணுகவேண்டும் ஐயா? அரசியல் ரீதியிலா, ராணுவ ரீதியிலா, விளையாட்டு ரீதியிலா? அமைச்சரது அறிவுத்திறன் புல்லரிக்க வைக்கிறது.

  “வைணவ சுடராழி” புதுமை ஜோசஃப் ராமானுஜதாஸன் அதிகாரபூர்வமாக தாய்மதம் திரும்பித் தன்னை இந்து என்று அறிவித்துக்கொண்டவர். தமது ஆசாரியாரின் ஆணைப்படி தான் பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் கூட, உ.பி. ஷியா வக்ஃப் போர்ட் முன்னாள் தலைவர் வாஸிம் ரிஸ்வி தாய்மதம் திரும்பி ஜிதேந்திர நாராயண் ஆனது பற்றிய செய்தி வந்தது. ஆனால், ஜாகீர் உசேன் இவ்வளவு தூரம் வைணவ விஷயங்களில் உட்புகுந்திருக்கிறார். ஆனால் அதிகாரபூர்வமாக இந்துவாகவில்லை. இன்னும் தன்னை “முஸ்லிம்” என்று அழைத்துக் கொள்கிறார். இவருக்கு எதற்காக பெருமாள் கோயில்களில் அனுமதி வழங்கவேண்டும்?

  ஆனானப்பட்ட கே.ஏ.ஜேசுதாஸ் அவர்களுக்கே குருவாயூர்க் கோயிலில் அவர் இந்துவாக மாறினால் தான் அனுமதி என்று கோயில் விதிமுறைகளின் படி தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவரும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார் (ஆனால் சபரிமலையில், இந்துக்கள் அல்லாதவர்களும் தரிசனம் செய்யலாம் என்றே விதிமுறை உள்ளதால், அவர் பலமுறை தரிசித்திருக்கிறார்). உண்மையிலேயே பெருமாள் மீது அவ்வளவு பக்தியிருந்தால், ஜாகீர் உசேன் அதிகாரபூர்வமாக இந்துவாக மாறி உள்ளே வரட்டும். அப்போது யாரும் தடுக்கப்போவதில்லை. அதைச்செய்ய அவருக்கு என்ன தயக்கம்?

  கருத்து : கே.பி. கள்ளபிரான்

  கோயில்கள் இந்துக்களுக்காக, இந்துக்களால் நடத்தப் படுபவை, கண்டிப்பாக அவ்வாறே நடத்தப்பட வேண்டியவை. இங்கே எம் மதமும் சம்மதம் போன்ற முட்டாள்தனங்களுக்கு இடமே இல்லை. நீ இந்துவா வா, இல்லையா வெளியே நில் – இதுதான் ஆபிரகாமியர்கள் கோயில்கள் விஷயத்தில் வைக்கப்பட வேண்டிய இடம்.

  ஐயோ, ஆண்டவன் இருக்கும் இடத்தில் சக மனிதர்களுக்குள் வேற்றுமை வருகிறதே? ஆண்டவன் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கலாம் ஆனால் கோயிலை ஆண்டவன் நேரடியாக நிர்வாகம் செய்வதில்லை. ஆகையால் இதில் ஆண்டவனை இழுக்கவே கூடாது. மனிதர்கள் நிர்வாகம் செய்யும் இடங்களில் இன்ன மனிதர்களை அனுமதிக்கலாம், கூடாது என்பதை மனிதர்களே தீர்மானிப்பார்கள்.

  திருச்சி ஜாக்கிர் உசைன் என்று அல்ல நாளை வேறு எந்த ஜாக், டாம், டிக் வந்தாலும் தான் இந்துவாக இல்லாத பட்சத்தில் கோயில்களுக்குள் அனுமதிக்கவே கூடாது. அது இந்துக்களுக்கென்றே பிரத்தியேக உரிமையுள்ள இடம். இந்த உரிமையைப் பக்தர்கள், பட்டர்கள், அரசாங்கம் உட்பட யாருக்கும் மாற்ற அனுமதி கிடையாது. ‘உண்மையான’ நாஸ்திகனைக் கூட அனுமதிக்கலாம், ஆனால் ஆபிரகாமியர்களை அனுமதிக்க முடியாது. ஏனெனில் மத ரீதியாக, கலாசார ரீதியாக, சமூக ரீதியாக நாம் இயங்கும் திசைக்கு நேரெதிர்த் திசையில் இயங்குபவர்கள் அவர்கள்.

  கருத்து: வி.ராம்குமார்

  அந்த முஸ்லீம் பெருமாள் மீது அத்தனை பக்தி கொண்டவரா? அப்படி எனில் தன் இஸ்லாம் மதத்தை துறந்து இந்துவாக முழு வைணவராக ஆகி விட வேண்டியது தானே. ஆகவில்லையா? குறைந்த பட்சம் சதா சர்வ நேரமும் நெற்றியில் திருமண் உடன் இருக்கிறாரா? அதுவும் இல்லையா? வீட்டில் பெருமாளுக்கு குடும்பத்துடன் பூஜைகள் செய்கிறாரரா? அதுவும் இல்லையா?

  அதாவது முஸ்லீம் அடையாளத்துடன் செக்யூலர் போர்வையில் ஹிந்து கோவிலுக்குள் வந்து செல்ல வேண்டும். தான் முஸ்லீம் என்பதை விட மாட்டார். அவரை ஹிந்துக்கள் ஆர தழுவி வரவேற்க வேண்டுமா? இதற்கு பிஜெபி யினர் அந்த முஸ்லிமுக்கு கடுமையாக முட்டு கொடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் அந்த முஸ்லீம் ஒரு திராவிடியா சிந்தனையாளர் என்று கூறப்படுகிறது. .மோடி வெறுப்பாளர் என்று அறியப்படுகிறது. ஏன் பாஜக வினர் அப்படிபட்ட முஸ்லிமுக்கு முட்டு கொடுத்து வருகின்றனர் என்று தெரியவில்லை.

  ஹிந்து கோவில்கள்க்கு தனக்கென்று தனிதன்மைகள் புனித தன்மைகள் எதுவும் இருக்க கூடாதா என்ன?

  பாஜகவினரே. எப்போது தான் திருந்துவிற்கள். உங்களுக்கென்று ஒரு சித்தாந்தம் , ஆன்மிகம், ஹிந்து உணர்வு என நிரந்தரமாக எதுவும் கிடையாதா? திடீரென ஈ வெ ரா வை போற்றுவதும் அப்புறம் மாற்றுவதும் மோடியை வெறுக்கும் முஸ்லிமுக்கும் முரட்டு முட்டு கொடுப்பதும் ….

  வெட்கம் வேண்டும்.!

  கருத்து : தேவ் ராஜ்

  “முஸ்லிம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் அவமானப்படுத்தப் பட்டேன்” – பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் குற்றச்சாட்டு

  உண்மையிலேயே தர்ஶநம் தடைப்பட்டதால் நெஞ்சுவலி வருமளவு அரங்கன்பால் ஆராத அன்பு கொண்ட பக்ஷத்தில் ஹுசைன் சாயுபுவுக்குக் கூடவே ஓர் அராபிய அடையாளமும் எதற்காக?

  வெளிப்படையாக வைணவத்தில் இணைந்தால், முஸ்லிம்கள் திகவில் சேர்ந்திருந்த கோவை ஃபாரூக்கைப் போட்டுத்தள்ளியதுபோல் ஆகிவிடும் என பயப்படுகிறாரா?

  ஐயா சொறியான் சிலைக்கருகே நின்று ஃபோடோ எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்துவது எந்தக் குழுவைக் கவர்வதற்காக? அதையும் பெருமாள் கைங்கர்யம் என எடுத்துக்கொள்ள வேண்டுமா?

  இவரிடம் ஃபோனில் வினவினேன் சில ஆண்டுகளுக்கு முன். விடை இல்லை.

  திமுக அராஜகங்களால் கொதித்துப்போயுள்ள மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்கான திமுக திருக்கூட்டத்தினரின் வழக்கமான அழுவாச்சி நாடகமாகவும் இது இருக்கலாம்; ஜாகிர் ஹுசைனும் ஒரு கழக உறுப்பினர்தான்.

  பாஜக முக்கியப் பொறுப்பு வகிப்போரும் இந்த ஆசாமிக்கு ஆதரவாகப் பேசுவது வியப்பையே தருகிறது. ஆலயத்தினுள் எல்லா மதத்தினரையும் அனுமதிக்கலாம் என வந்துவிட்டால், நிர்வாகப் பொறுப்புகளிலும் அவர்கள் இருப்பதையும் தடைசெய்ய முடியாது என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.

  ஸ்ரீராம பக்தரான கபீர்தாஸ் ஸ்ரீராமாநந்த ஆசார்யரின் அடிபணிந்து தீக்கை பெற்று பாகவதரானார். ஸ்ரீக்ருஷ்ண பக்தரான ரஸ்கான் ஸாஹப் ஸ்ரீவிட்டலநாத கோஸ்வாமியின் அடிபணிந்து தீக்கை பெற்று பாகவதரானார். அவர்களிடம் உண்மையான வேட்கை இருந்தது, கூட்டம் சேர்க்கும் எண்ணமில்லை.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  2 × one =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,055FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,462FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

  இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  Latest News : Read Now...