முதல் காவல்கார திருடன்… ப.சிதம்பரம்! அடுத்து… துணைபோகும் நீதிமன்ற ’சைனி’யங்கள்!

பாரதப் போரில்! பீமன் துச்சாசனையும், துரியோதனனையும் வெல்லும்போது அவன் மனதின் அடியில் உறைந்திருக்கும் வெறுப்பு அவன் வார்த்தையில் வெடிக்கும்.

அதற்கடுத்து ஜெயத்ரதனை வெல்லும்போழுது அர்ச்சுனன் உணர்ச்சி ப்ரவாகமாக இருப்பான். சகுனியை கொல்லும் நகுல சகாதேவர்களுக்கு, தாய் மாமன் சல்லியனை வஞ்சகமாக துரியோதனாதியர்களுடன் சேர வைத்தவன் இவன் என்ற கோபம்தான், சகுனியைக் கொல்லுவதற்கு காரணமாக அமைந்தது.. ரொம்பல்லாம் வெறுப்பில்லை.!

யுதிஷ்ட்ரன் ஒரு வேலை வைத்து சல்லியனை எந்த உணர்ச்சியும் காட்டாமல் வென்றான்.

ஆக ஒரு சிலரின் பாவங்களின் தன்மைக்கேற்ப ஒரு சில தெரிந்தெடுக்கப்பட்ட வீரர்களால் மகாபாபிகள் அவ்வீரர்களின் கொக்கரிப்புகளுடன் மரணத்தை சந்திக்கின்றனர்.

ப.சிதம்பரம் என்ற இந்தியாவின் மிக ”பெரிய ஐயோன்னு போவான் ரக அறிவாளி” 2019 மே மாசத்துக்குள் கம்பியை எண்ண வாய்ப்பில்லை.

அவருக்கு நீதிமன்றத்தில் உதவிட பெரிய “சைனியமே” இருக்கின்றது.

இன்று இதைச் சொல்வதற்குக் காரணமே ப.சிதம்பரத்தின் இந்த திமிர் டிவிட்டர் பதிவுதான். இனியும் இவர் தண்டிக்கப்படாவிடில் மோடிக்கு 543 சீட்டுக்கள் கொடுத்தும் நமக்கு வெறி அடங்காது!

எனினும் மோடியின் மகா ரசிகர்களும்கூட அவரால் ப.சிதம்பரத்தை தண்டிக்க முடியாததை பெரும் குறைவாகவே கருதுகின்றனர்.

மோடியின் முதல் இன்னிங்ஸில் மைலார்ட் ”சைனி”யத்தினர் தங்கள் பலத்தை காட்டியுள்ளனர் என்று மோடிக்கு சந்தேகத்தின் பேரில் ஒரு “மாப்பு” வழங்க தயாராக உள்ளனர்.

ஆனால், அடுத்த 2019-24 பீரியட்டில் ப.சிதம் பரத்தை நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு கையில் விலங்குகள் பூட்டி சிறைக்கு அழைத்து செல்லப்படும்போது மோடி அவர்கள் அதனை விலாவாரியாக நேரலையில் வர்ணனை செய்ய வேண்டும்… என்ற ஆசை அவர்களுக்கு உண்டு!

பீமன் துச்சாசனனை துவம்சம் பண்ணும்போது கூறிய வார்த்தைகள் நினைவில் கொள்ளத் தக்கவை.

“‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் — தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; — அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! — இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, — இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான்”

– நாராயணன் சேஷாத்ரி  (Narayanan Seshadry)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...