வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மிரட்டல்! ‘ஏழைகளுக்கான’ மோடி அரசு !

வரி விவகாரம்..! மிரட்டும் அமெரிக்கா; அசராத இந்தியா! ஏழைகளின் மோடி அரசு ஆயிற்றே! வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியாக முட்டலும் மோதலும் ஒட்டலும் உரசலும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தகத்தை முன்னிறுத்தி இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறார். ஆனால் ஓரளவு இயைந்து கொடுத்த மோடி இப்போது முரண்டு பிடிக்கிறார்!

சில நாட்களுக்கு முன் ஒரு பழமைவாத அரசியல் நடவடிக்கை மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகபட்ச வரி விதிக்கிறது என்று கோபப் பட்டார்.

1970-களில் பொருளாதாரத்தில் வளர்ந்து  வரும் நாடாக திகழ்ந்து வந்த இந்தியாவை
அமெரிக்கா ஜி.எஸ்.பி. எனப்படும் பொதுவான முன்னுரிமை திட்டத்தின் கீழ் சேர்த்தது. இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவிடம் வர்த்தக ரீதியில் சலுகை பெற்று அதிக பலன் அடைகிற நாடாக இன்றளவும் இந்தியா விளங்கி வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும்  இந்தியாவில் இருந்து அமெரிக்கா 5.7  பில்லியன் டாலர் (சுமார் ரூ.40,470 கோடி) பொருட்களை சுங்க வரி விதிக்காமல்  இறக்குமதி செய்தது. இந்நிலையில், ஜி.எஸ்.பி. திட்டத்தின்  கீழ், இந்தியாவுக்கு வழங்கி வரும் வரிச் சலுகையை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்கா நேற்று 60 நாள் நோட்டீஸ் வழங்கியது.

இந்நிலையில், அமெரிக்கா எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து தீர்வு காண இந்தியா முன்வந்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டார்.

இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகை அமெரிக்கா பறித்தாலும் இந்தியாவில் அது குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். ஆயினும், இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தக சலுகையை டிரம்ப் தொடர்ந்து வழங்க வேண்டும் என அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் வலியுறுத்துகிறது.

இந்நிலையில், அமெரிக்க இந்திய வர்த்தக உறவுகள் நிலை குறித்தும் இதன் பின்னணி குறித்தும் இந்திய பொருளாதார வல்லுநர்கள் கூறுவதன்படி பார்த்தால்…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிச்சலுகை
வழங்காது ! காரணம் என்ன ? இருதய நோய் சிகிச்சையில்  பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட் , மூட்டு  மாற்று உபகரணங்களின் விலையை அரசு  கட்டுப்படுத்தாமல் அமெரிக்க கம்பனிகள்  விலை நிர்ணயம் செய்ய அனுமதிக்க  வேண்டுமாம் !

ஏழைகளுக்குத் தரமான மருத்துவ வசதி  கொடுக்க வேண்டும் என்ற கொள்கையைக்  கொண்ட மோடி அரசு , அமெரிக்க  வற்புறுத்தலுக்கு அடிபணியவில்லை ! கோபத்தில் அமெரிக்கா வரிச்சலுகையை ரத்து செய்யப் போகிறதாம் ! ஏழை எளிய மக்களுக்காக அமெரிக்க  கார்பரேட் சக்திகளை எதிர்த்து போராடும்  மோடி அரசை ஆதரிப்போம் !

மோடி அரசை எதிர்ப்பவர்கள் போலிப்  போராளிகள் என்பதைப் புரிந்து கொள்வோம்! என்கின்றனர் பாஜக.,வினர்.!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...