தனக்கு மக்கள் செல்வி என்று பட்டம் கொடுத்தால் மட்டுமே பட புரொமோஷன்களில் கலந்து கொள்வேன் என்று நடிகை வரலட்சுமி மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். இவர் நடித்த ராஜபார்வை படம் வெளியாவதில் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுக்க நடிகை வரலட்சுமிக்கு மிக முக்கியமான ஆண்டு என்றுதான் கூற வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் அவர் மொத்தம் 8 படங்களில் நடித்தார்.
நடிகர் விஜயுடன் சர்க்கார், தனுஷ் நடித்த மாரி 2 என்று பல படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். நிறைய படங்களில் இவருக்கு வில்லி ரோல் கொடுக்கப்பட்டது.
அதேபோல் தற்போது அவருக்கு நிறைய படங்களில் வில்லி ரோல் வழங்கப்பட்டு வருகிறது. வெல்வெட் நகரம், கன்னி ராசி, நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் எல்லாம் அவருக்கு மிகவும் முக்கியமான பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இவர் மாற்று வேடங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்த ராஜபார்வை படம் தயாராகும் நிலையில் உள்ளது.
இந்த ராஜபார்வை படத்தில் வரலட்சுமி மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார். திரில்லர் ஜானர் படமான இது நிறைய ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக வரும் என்கிறார்கள். இந்த படத்திற்காக வரலட்சுமி சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.
முக்கியமான சண்டை பயிற்சியாளர்களிடம் சண்டை பயிற்சி, கத்தியை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் ஜே கே இயக்கி உள்ளார். ஆனால் இந்த படத்தின் புரோமோஷன் எதற்கும் வரலட்சுமி வரவில்லை என்றும் படக்குழுவில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் தன்னுடைய பெயரை டைட்டில் கார்டில் மக்கள் செல்வி வரலட்சுமி என்று போட வேண்டும் என்று வரலட்சுமி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு படக்குழு ஒப்புக்கொண்டது போல தெரியவில்லை.
இதனால் கண்டிப்பாக வரலட்சுமி தனக்கு மக்கள் செல்வி என்று பட்டம் கொடுத்தால் மட்டுமே, படத்தின் விளம்பரத்திற்கு வருவேன் என்று விடாப்பிடியாக கூறிவிட்டார்.
எனக்கு அந்த பட்டம் வேண்டும். அதை கொடுத்தால் மட்டுமே படத்தின் விழாக்களில் கலந்து கொள்வேன். அது இல்லாமல் கண்டிப்பாக புரோமோஷன் பணிகளை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
அவரின் இந்த பிடிவாதத்தால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ஆனால் இன்னும் படத்திற்கு பெரிய புரோமோஷன் நடக்கவில்லை. படத்திற்கு சரியாக விளம்பரம் கிடைக்கவில்லை என்று தயாரிப்பு குழு அதிர்ச்சியில் இருக்கிறது.