ஜெர்மனியில் நடந்த இரு துப்பாக்கிச் சூடு சம்பங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஜெர்மனி காவல் அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை இரவு இரு மதுபானக் கூடங்களில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட முக்கிய நபர், அவர் இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் ஜெர்மன் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.