ஆ..! அன்னாந்து பார்க்க வைக்கும் தங்கம் விலை!

Published:

gold rate - 2026

ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை’:

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை.

2 நாட்களில் சவரனுக்கு ரூ.336 வரை உயர்ந்து புதிய உச்சத்தில் தொடர்ந்து விற்பனையாகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

gold 2 - 2026

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.31 ஆயிரத்திற்கு மேலாகவே நீட்டித்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதே போல உயர்ந்து வந்தால் ரூ.32 ஆயிரத்தை எட்டி விடும் சூழல் நிலவுகிறது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,980க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.31,840க்கு விற்கப்படுகிறது.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!
gold lady - 2026

இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.10க்கு விற்கப்படுகிறது. அதன் படி கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.52,100க்கு விற்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img