விஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்!

எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமாக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண். 

சென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “…. போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை.

பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார்! அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள்.

போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது.

கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர்.

இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார்.

சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்… என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர்.

எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்… என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண்.

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...