இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது தந்தை, தாய் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!

டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட படங்களில் சிறுவன் வேடத்தில் நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு இசையமைத்தார். ஆனால், அதற்குப் பின்னர் சினிமா துறையில் அவர் அதிகம் ஈடுபடவில்லை.

இந்நிலையில் இன்று காலை சமூக தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில், தன் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா முன்னிலையின் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக காட்சிகள் இருந்தது. குறளரசன் இஸ்லாம் பெரியவர் முன்னர் கைகளைப் பிடித்து அமர்ந்தபடி, இஸ்லாத்துக்கு மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது

சிம்பு சிவ பக்தர். சிம்புவின் சகோதரி கிறித்தவ மதத்தில் உள்ளார்.  சிம்புவின் சகோதரர் குறளரசன் தற்போது இஸ்லாமுக்கு மாறியுள்ளார். இப்படி மும்மதங்களுக்கும் மூன்று பேரைத் தத்துக் கொடுத்த டி.ராஜேந்தர் இது குறித்துக் குறிப்பிட்ட போது, “எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவே தேவன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பவன் நான். குறளரசன் இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார். என் மகனின் விருப்பத்துக்கு நான் மதிப்பு கொடுத்துள்ளேன்” என்றார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...