ஆரோக்கிய சமையல்: திணை இடியாப்பம்!

thinai idiyappam

திணை இடியாப்பம்

தேவையானப் பொருட்கள்

திணை மாவு – 3 கப்,
அரிசி மாவு (இடியாப்ப மாவு) – 1 கப்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

வெறும் கடாயில் திணை மாவை கைபொறுக்கும் சூடு வரும் வரை வறுத்து ஆறியபின் அரிசி மாவுடன், உப்பு சேர்த்து கலந்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வெந்நீரை எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். அந்த வெந்நீரை மாவில் விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கிண்டவும். மாவை உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :