ஆரோக்கிய உணவு: கேழ்வரகு கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kezhvaraku kozukatai - 2026

கேழ்வரகு கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்

கேழ்வரகு மாவு – ஒரு கப்

பாசிப் பருப்பு – ஒரு கைப்பிடி

தேங்காய்த் துருவல் – கால் கப்

நாட்டுச் சர்க்கரை – கால் கப்

ஏலக்காய் – 2

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பாசிப் பருப்பை வேகவைத்து எடுத்துவையுங்கள். கேழ்வரகு மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள்.

அதனுடன் வேகவைத்த பாசிப் பருப்பு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.