பிப்ரவரி 24, 2021, 11:12 மணி புதன்கிழமை
More

  ஆரோக்கிய சமையல்: மூவகை பருப்பு உசிலி!

  Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: மூவகை பருப்பு உசிலி!

  ஆரோக்கிய சமையல்: மூவகை பருப்பு உசிலி!

  3star-usili

  மூவகை பருப்பு உசிலி

  தேவையானவை:
  துவரம்பருப்பு. – ஒரு கப்,
  கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு – தலா அரை கப்,
  காய்ந்த மிளகாய். – 6,
  பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
  கடுகு, உளுந்து. – தலா ஒரு டீஸ்பூன்,
  பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 6 டேபிள்ஸ்பூன்,
  கறிவேப்பிலை. – ஒரு ஆர்க்கு,
  நறுக்கிய கொத்தமல்லித் தழை – ஒரு டீஸ்பூன்,
  எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
  உப்பு. – தேவையான அளவு.

  செய்முறை:
  மூன்று பருப்புகளையும் காய்ந்த மிளகாயுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இட்லித்தட்டில் லேசாக எண்ணெய் தடவி, அரைத்த விழுதினை அதில் போட்டு, 10 நிமிடங்கள் வேகவிடவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). இதை கொஞ்சம் ஆறவிட்டு, பின்னர் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பூ மாதிரி ஆகிவிடும்.

  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி, உதிர்த்த பருப்பை போட்டுக் கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

  இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட லாம். சாம்பார், தயிர் சாதத்துக்கு சைட் டிஷ் ஆக வும் உபயோகிக்கலாம்.

  குறிப்பு: பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பீன்ஸ், கொத்தவரங்காய் ஆகியவற்றை வேகவைத்து இந்த உசிலியுடன் சேர்த்து வதக்கிச் செய்தால், இன்னும் சுவையும் மணமும் கூடும்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari