உதவ வந்த இளைஞனை அடைத்து வைத்து தீ வைத்த குடும்பம்!

fire 2

உத்திரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டத்தில் வசித்து வந்தவர் அபிஷேக். 19 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் வசித்த வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேக்கின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சிகிச்சைக்காக உறவினர் ஒருவரிடமிருந்து அபிஷேக் பணம் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்.

அப்பொழுது அபிஷேக்கின் காதலி அவருக்கு போன் செய்து வர கூறியுள்ளார். அபிஷேக்கும் அவரைக் காண்பதற்காக சென்றுள்ளார்.

அப்பொழுது அப்பெண்ணின் உறவினர்கள் அபிஷேக்கை பிடித்து தனிஅறையில் அடைத்து. அந்த அறைக்கு தீ வைத்து உயிருடன் கொளுத்தியுள்ளனர். இந்நிலையில் உடல் எரிந்து, அபிஷேக்கின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பாதி வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அபிஷேக்கின் குடும்பத்தினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அபிஷேக்கின் காதலி அவரது மாமா மற்றும் அத்தையை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements