
காராமணி கிரேவி
தேவையானவை:
காராமணி – ஒரு கப்,
தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்),
பூண்டு – 2 பல்,
பட்டை – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 1 அல்லது 2,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

காராமணியை முதல் நாள் ஊற வைக்கவும் (மாலையில் செய்வதானால் காலையில் ஊற வைக்கவும்). ஊறிய காராமணியை குக்கரில் வேக வைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பட்டை சேர்க்கவும். வெங்காயம் வதக்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். ஆறியதும் இதை விழுதாக அரைத்து, காராமணியுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். உப்பு, கொத்தமல்லி சேர்த்து… 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.



