மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்!

பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

modi birthday
ஒடிஸா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் @sudarsansand மோடியின் பிறந்த நாளுக்காக உருவாக்கிய மணற் சிற்பம்

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடி அசத்தியுள்ளனர் நாகாலாந்து குழந்தைகள்! அதனை மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் சேவை வாரமாகக் கொண்டாடப் படுகிறது. பிரதமர் மோடியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செப்.17 – பாரத நாட்டின் முகத்தையே மாற்றி அமைத்த மாமனிதரின் பிறந்த நாளாக கொண்டாடப் படுகிறது. தூங்கிக் கொண்டிருந்த தேசத்தைத் தட்டி எழுப்பி, சீர்திருத்தப் பாதையில் நடை போட வைத்திருக்கும் பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை நாட்டில் பரவலாக சேவை வாரமாக பாஜக., கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உங்களிடம் இருந்து எங்களுக்குக் கிடைத்த கவனிப்பும் அன்பும் எங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது; ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் தங்களின் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடுகிறது என்று குறிப்பிட்டு டிவிட்டர் பதிவில் இம்சொங் என்பவர் பகிர்ந்துள்ளார். இந்தக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் மோடியை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவரும் தன் டிவிட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.

Advertisements