ஶ்ரீவி. கோயிலில் கோலத்தை அழித்த டிஎஸ்பி… பகீர் பின்னணி!

:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பெரும் அபசகுணத்தை நிகழ்த்தி இருக்கிறார் டிஎஸ்பி.

கோவிலில் பங்குனி உத்திர திருநாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்துள்ள நிலையில் அங்கே வழக்கமான சுப அடையாளங்களான கோலங்கள் கோயிலை சுற்றி பிராகாரத்தில் மண்டபத்தில் கோயிலுக்குள் போடப்பட்டிருக்கின்றன.

இவை ஆச்சார அனுஷ்டானங் களுடன் கோவிலை சார்ந்தவை. கோயில் நடை முறை பூஜை முறைகளை சார்ந்து இத்தகைய மாக்கோலங்கள் போடப்படுகின்றன

இந்நிலையில் வழக்கம்போல் காலையில் வந்து கோயிலுக்குள் தன் அதிகாரத்தை செலுத்தி வந்த டிஎஸ்பி ராஜா,  திடீரென கோயில்களில் சுற்றிலும் பூக் கோலங்கள் மாக்கோலங்கள் தாமரை வடிவிலான கோலங்கள் இவை வரைந்து இருப்பதைக் கண்டு அவற்றை உடனே அழிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்

இது ராஜாதான் தானாக செய்தாரா அல்லது ஆய்வாளர் ஒருவரின் தூண்டுதலின் செய்தாரா என்பது கேள்வி யாக உள்ளது.

உள்ளூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்தவரான பவுல் என்பவர் அவருக்கு கோவில் நடை முறைகள் மீதும் பாஜக மீதும் கடுமையான கால் புணர்வு இருந்ததாகவும், சர்ச் சொன்னதன் பேரில் ஆலய நடைமுறைகளை கொச்சைப்படுத்த முயன்றதாகவும் புகார் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

அதன் காரணத்தால் பவுல் சொல்லி டிஎஸ்பி ராஜா இதற்கு கட்டளை யிட்டாரா என்ற சந்தேகத்தை உள்ளூர்வாசிகள் எழுப்புகின்றனர்

இந்தக் கோலங்களை அழித்தே தீரவேண்டும் என்று அங்கேயே அமர்ந்து அவற்றை அழித்து விட்டு அதன்பிறகு சென்றுள்ளார் டிஎஸ்பி ராஜா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம் சாதாரண கோயில் அல்ல! தமிழகத்தின் பண்டைய பக்தி மார்க்கத்தையும் தமிழர்களின் வாழ்வியல் முறையையும் இன்றளவும் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் ஆண்டாள் அவதரித்த மண். ஆண்டாளின் ஆலயம்!

அதனால் தான் தமிழகத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்ட ஆண்டாள் கோயில் கோபுரத்தை அரசின் சின்னமாக தமிழக அரசு கொண்டிருக்கிறது

அத்தகைய ஆண்டாள் கோவிலில் அண்மைக் காலங்களாக போலீஸ் அவுட் போஸ்ட் என்று முழுக்க முழுக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பது மிக மிக மோசமானது என்று தோன்றுகிறது

ஆலயம் வழிபாட்டிற்கு உரிய இடம் தானே தவிர காவலர்கள் தங்கும் இடம் அல்ல!

இந்தக் கோயிலில் காலை விஸ்வரூப தரிசனம் நடக்கும் போது மேற்படி டிஎஸ்பி ராஜா கோவிலில் வந்து அமர்ந்து கொள்வார் என்றும் அப்போது பூஜைக்கு செல்லுகின்ற பட்டர்கள் அவருக்கு மாலை மரியாதைகளை கொண்டு வந்து கொடுப்பார்கள் என்றும் அதனால் இவருக்கு அதிகமாகவே தான் என்ற அகம்பாவம் அதிகரித்து வருவோர் போவோரை மிரட்டி கொண்டிருப்பார் என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்:

வழக்கம்போல் தனது அதிகார மிடுக்குடன் கோயிலுக்கு வந்த டிஎஸ்பி ராஜா கோயிலில் தாமரை வடிவிலான கோலங்கள் வரையப்பட்டிருப்பது ஏதோ அரசு அலுவலகத்தில் வரையப்பட்டிருப்பது போன்ற எண்ணத்தில் பார்த்து இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார்

முந்தைய நாள்தான் கோயிலில் கொடியேறி இருக்கிறது என்பதையும் கொடியேற்றத்தின் போது வழக்கமாக கோயிலில் மங்கள பொருள்களை மங்கல சின்னங்களை வரைவதும் வைப்பதும் உண்டு என்பதையும் அறிந்தோ அல்லது வேண்டு மென்றோ இவ்வாறு நகர்த்த முனைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது

இவர் இவ்வாறு கோயிலில் வரையப்பட்ட கோலங்களை அழிப்பது ஊருக்கு நல்லது அல்ல என்பதுடன் தமிழக அரசின் சின்னத்தில் இருக்கும் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் சின்னம் அவமானப்படுத்தப்பட்டதன் மூலம் …. அபசகுணம் விளைவிக்கப்பட்டதன் மூலம் தமிழக அரசுக்கு கெடுதலை செய்திருக்கிறார் டிஎஸ்பி.

அதுவும் எதிர்க்கட்சிக்காரர்கள் தூண்டுதலில் அல்லது வேற்று மதத்தை சேர்ந்தவர் தூண்டுதலில் செய்து இருக்கிறார் என்றும் சந்தேகங்களை எழுப்புகிறார்கள்

குறிப்பாக இந்த கோலங்களை பெண்கள் முந்தைய நாள் வரைந்து சென்றிருக்கிறார்கள் இவை அரிசி மாவினால் செய்யப்பட்ட கோலங்கள் இந்த திருவிழா முடிவதற்குள் நான்கைந்து நாட்களில் அதுவாக அழிந்துவிடும்

ஆனால் அவற்றை வேண்டுமென்றே அழிக்க முற்படும்போது அது ஊருக்கு கெடுதலையும் அவ சகலத்தையும் ஏற்படுத்தும் என்பதை அறியாதவரா இந்த டிஎஸ்பி ராஜா அப்படி அறியாதவர் எதற்காக கோயிலுக்கு பாதுகாப்பு பணிக்கு வருகிறார் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் அன்பர்கள

நமக்கு தோன்றுவதெல்லாம் இதுதான் … கோயில் அரசு அலுவலகம் அரசு அலுவலகத்தில் தான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் அரசு அலுவலகங்களில் மற்ற கட்சியினருக்கு இடம் அளிக்கவும் சின்னங்களை காட்சிப் படுத்தவும் பிரச்சாரத்துக்கும் பயன் படுத்தக் கூடாது என்று நடைமுறைகள் ஒத்து வரலாம்

ஆனால் திமுக வுக்கு காசு கொடுத்து வேலைக்கு வந்தவர்கள் திமுக காரர்கள் ஆகவே அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் இந்த தேர்தல் ஆணையத்தால்???

இதுதான் அப்படிப்பட்ட ஒரு பின்னணியில் தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்து இருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது குறிப்பாக இந்த கோலங்களை அழிப்பதற்கு அவர் கோயில் செயல் அதிகாரியிடம் ஆணையிட்டிருக்கிறார் வழக்கறிஞர் தொழிலில் இருந்து விட்டு செயல் அலுவலராக வந்தமர்ந்த அவருக்கு வழக்கம்போல் திராவிடர் கழக நாத்திக புத்திதான் என்றும் கோயில் நடைமுறைகளை அறியாத ஒரு செயல் அலுவலர், டிஎஸ்பி இவ்வாறு கூறியதும் உடனே தலையாட்டினார் என்றும் புகார் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்

மங்கல சின்னங்களாய் பெண்கள் வரைந்து வைத்த கோலங்களை கோயில் மணியக்காரர் அ அழைத்து அளிக்க உத்தரவிட்டிருக்கிறார் டிஎஸ்பி ராஜா ஒரு பிராமணரை வைத்து இவற்றை செய்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது இவர்கள் பணியில் இருப்பதற்கு லாயக்கற்றவர்கள் என்பது மட்டும் உண்மை.

எனவேதான் கோயில்களை அரசு அலுவலகங்கள் ஆக மாற்றி இருக்கும் அறநிலையத்துறையை கோயிலை விட்டு அகற்ற வேண்டும் என்று ஹிந்து உணர்வாளர்கள் போராடி வருகின்றனர்

இப்படி அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியே வராத வரை இத்தகைய தற்குறிகள் அதிகாரிகளாக அமர்ந்துகொண்டு நாத்திகத்தை கோயில்களில் புகுத்தி கொண்டிருப்பார்கள். அவற்றை தட்டிக் கேட்க கூட வக்கற்றவர்களாக கோயில் கைங்கரியம் செய்பவர்களும் பக்தர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை தரும் அம்சம்.

கோவிலுக்குள் ஏதாவது தேர்தல் பூத் வாக்கு சாவடி அமைக்கப் போகிறார்களா? அல்லது கோயில் என்பது அரசுக்கு உடைமையான அரசு அலுவலகமா? ஆண்டாள் கோயிலில் எங்கே பார்த்தாலும் ஏதாவது ஒரு கட்சியின் சின்னம் இருக்கத்தான் செய்யும்! அதற்காக கோயிலையே மூடி விடுவார்களா? இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கை கொட்டி சிரிக்கிறார்கள் போலீசாரின் இந்த கிறுக்குத்தனமான புத்தியை பார்த்து!

இப்படி தான்தோன்றித் தனமாக தேர்தல் ஆணையத்தின் மீது பழியைப் போட்டு தனது வக்கிரத்தை செயல்படுத்திய டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் பவுல் ஆகியோர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் போலீஸ் அவுட் போஸ்ட் என்பது இருக்கக் கூடாது. இல்லாவிட்டால் திட்டமிட்டு தற்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு இவர்கள் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று கூறுகின்றனர் பக்தர்கள்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...