பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

Published:

nakkeeran gopal - 2026

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் நக்கீரன் கோபால் பாதிக்கப்பட்ட மாணவி குறித்த வீடியோவை வெளியிட்டு மேலும் சில மோசமான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து கருத்து கூறியிருந்தார்

இவை சமூகத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் தங்கள் மீது அவதூறான தகவல்களை பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகர் தரப்பில் இருந்து புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்தன

இதையடுத்து நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ தொடர்பான ஆதாரங்கள் மற்றும் அவர் கொடுத்த தகவல்களின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக ஐடி பிரிவு போலீசார் அவரை அழைத்திருக் கின்றனர்

இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் பலர் ஒன்றாக திரண்டு விசாரணைக்கு ஆஜராகிறோம் என்று கூறி இருந்தனர்

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஒரு வீடியோ மற்றும் தகவல்களை வைத்து நக்கீரன் கோபால் திமுகவுக்கு அடியாள் வேலை பார்க்கும்போது நக்கீரன் கோபாலுக்கு அடியாள் வேலை பார்க்க இத்தனை பத்திரிகையாளர்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்

நக்கீரன் கோபால் இந்த விவகாரத்தை வைத்து தான் சம்பாதித்த பணத்தை இப்படி தன்னுடன் வரும் பத்திரிக்கையாளர்களுக்கு அள்ளி விடுவாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்…

Related articles

Recent articles

spot_img