கோட்சே தவறை மன்னிக்காவிட்டாலும்… அவன் வாதங்களை பூமியில் புதைத்து விடாதீர்கள்!

கோட்சே செய்த தவறை மன்னிக்காவிட்டாலும் அவன் எடுத்துரைத்த வாதங்களை பூமியில் புதைக்க கூடாது. சுயநலத்திற்காக மறைக்கக்கூடாது. அவனுடைய ஆவேசம் இந்து மதத்துடையது அல்ல. அன்றைய பிரிவினை அவனுடைய இங்கிதத்தை வீழ்த்திவிட்டது.

சாமவேதம் ஸ்ரீ சண்முக சர்மா

அண்மைக்காலமாக தேசிய உணர்வுகளை எதிர்க்கும் கும்பல்களும் போலி மேதாவிகளும் உலக வரலாற்றில் மக்களை ஹிம்சையால் அடிமைப்படுத்திய இரு மதங்களைப் பாராட்டியும் பாரதீய கலாசாரத்தை இழிவுபடுத்தியும் ஹிந்து தர்மத்தை வெறுத்தும் வாயில் வந்ததைப் பிதற்றி வருகிறார்கள்.

எத்தனை நிந்தித்தாலும் பதில் கூறா பொறுமை குணம் இந்துக்களிடம் உள்ளது என்று அவர்களுக்குத் தெரிந்துள்ளது. அவர்களுக்கு உதவியாக அரசியல் கட்சிகளும் ஓட்டு வங்கிகளைக் கொஞ்சிக் குலாவும் தலைவர்களும் துணை சேர்ந்துள்ளார்கள்.

பகை நாட்டின் தீவிரவாதிகளைப் புகழ்ந்து போற்றும் இவர்கள் நம் தேச வரலாற்றுக்கு துரோகம் இழைப்பதற்குக் கூட பின்வாங்குவதில்லை. இவர்கள் எந்த மதத்தை போற்றுகிறார்களோ அந்த மதத்தவர் வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்குள் நுழைந்து விளைவித்த கொடூரமான கொலைகள் மிகமிக பயங்கரம்! வரலாற்றில் நிகழ்ந்த கொடூரம் அவை!

இந்நாட்டுச் செல்வங்களை கொள்ளையடித்தார்கள். எத்தனையோ அற்புதமான கட்டடங்களை துவம்சம் செய்தார்கள். எத்தனையெத்தனையோ ஞானச் செல்வங்களை எரித்தழித்தார்கள்.

மதம் மாறாததற்காக கோடிக்கணக்கானவர்களை கழுவில் ஏற்றினார்கள். கோடிக்கணக்கான பெண்களைச் சிறைபிடித்து துன்புறுத்தினார்கள். காம இச்சைக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் மட்டுமே உதவும் கருவியாக பெண்களை நடத்தினார்கள். சித்திரவதை செய்தார்கள். வீராதி வீரர்களை வஞ்சனையால் சிறைபிடித்து பேடிகளாக மாற்றி அடிமையாக்கினார்கள்.

ஒருவர் பின் ஒருவராக வந்த இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் மிருக பலத்தோடு பிசாசுகளைப் போல் நடந்து கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதற்கு எத்தனையோ சாட்சிகளும் ஆதாரங்களும் உள்ளன. அவர்களே கர்வத்தோடு எழுதிக் கொண்ட வரலாற்று ஆதாரங்கள் பலப் பல.

இன்றைய சுதந்திர பாரத தேசத்திலும் அவர்களின் பலம் அதிகமாக உள்ள இடங்களில் ஹிந்துக்களைத் தாக்குவது, துன்புறுத்துவது, பயந்து நடுக்கமுறச் செய்வது, கொள்ளையடிப்பது போன்ற தீய செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சம்பவங்களை செய்திகளாக வர விடாமல் கவனமாக கண்காணிக்கும் மீடியா நிறுவனங்களும் அரசியல் துணைகளும் ஏராளமாக உள்ளன.

புகழ்பெற்ற ஹிந்து கோயில்கள் துவம்சம் செய்த வரலாற்றை செக்யூலர் அரசாங்கங்கள் மூடி மறைத்து விட்டன. மனித வடிவம் கொண்ட ராட்சஸர்களை ஹீரோக்களாக சித்தரித்து உண்மையான மகா வீரர்களை கொள்ளைக் கூட்டத்தாராக விவரித்து தவறான வரலாற்றினை எழுதி இளைஞர்களை படிக்க வைத்தார்கள். அதனால் அவர்களுக்கு இந்நாட்டின் உண்மையான வரலாறும் நடந்த கொலைகளும் தெரியாமல் போயிற்று.

ஏதாவது கூறினால், “பழைய வரலாறுகளைத் தோண்டினால் விரோதம் வளரும்!” என்ற கள்ளப் பேச்சே பதிலாகக் கிடைக்கிறது.

ஆனால் கடந்த கால வரலாற்றின் வாஸ்தவங்கள் தெரிந்தால் தவறுகள் மீண்டும் நடக்காமல் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க இயலும். துவம்சமான தெய்வீக ஆலயங்களை மீண்டும் கட்ட முடியும்.

அமெரிக்காவில் ரெட் இண்டியன் களை கழுவிலேற்றிய ரத்த வரலாற்றை தற்கால அமெரிக்கா மூடி மறைக்க வில்லை. உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது. இது போல் பல நாடுகள் மன்னிப்பு கேட்டுள்ளன.

நம் பாரத தேசத்தில் மட்டும் வரலாற்றை மறைத்து வைப்பதும் வக்கிரமாக திரித்து எழுதுவதும் நடக்கிறது.

பாதிக்கப்பட்டு எத்தனையோ இழந்த ஹிந்து இனம் இன்று செக்யூலர் என்னும் “கபந்தக் கரங்களில்” சிக்கி நசுங்கிக் கொண்டிருதது. அப்போது, “அடிவாங்கிக் கொண்டு இருக்கிறோமே! ஐயோ…! அடிமைப்பட்டு கிடக்கிறோமே!” என்று அழுது வருந்திய ஹிந்துக்கள் இன்று தம் இருப்பே ஆட்டம் கண்டாலும் அதனைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இது இன்னும் பரிதாபமானது. வருத்தத்திற்குரியது.

ஹிந்து இனத்தில் பிறந்து, தவறான வரலாற்றைப் படித்து, ஹிந்து துரோகிகளாக மாறி… பகை நாடுகளைக் கூட போற்றுவதற்கு பின்வாங்காத தேச துரோகிகள் எதற்கும் துணிந்து… ஹிம்சை மதங்களுக்கு சேவகன் போல் சலாம் போட்டு… ஹிந்து மதத்தை வாய்க்கு வந்தபடி அவமானப்படுத்தி வந்தாலும் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.

“இந்து மதம் உலகில் உள்ள மதங்கள் எல்லாவற்றையும் விட பொறுமை வாய்ந்த மதம்!” என்று சமீபத்தில் சில வெளிநாட்டு ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனால் பிற மதங்களின் பாத தீர்த்தத்தைப் பருகி வரும் திருட்டுத் தலைவர்கள் “ஹிந்து தீவிரவாதம்” என்ற தவறான சொல்லைப் படைத்து, வீரத்தை முக்கியமாகக் கொண்டிருந்தும் கூட அமைதியை விரும்பும் ஹிந்து தர்ம நூல்களை இம்சையை பரப்பும் நூல்களாக ஏளனம் செய்கின்றனர்.

சீலமும் வரலாறுமற்ற நடிகர் ஒருவர் தன்னைத்தானே மேதாவியாக அறிவித்துக்கொண்டு உளறிக் கொண்டிருக்கையில் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

சமீபத்தில் வெளியான திரு எஸ் எல் பைரப்பா எழுதிய “ஆவரணம்” என்ற நாவல் கடந்த கால வரலாற்றில் ஹிந்து மதத்தின் மீது நடந்த படையெடுப்புகளை விரிவான வரலாற்றுக் குறிப்புகளோடும் ஆதாரங்களோடும் அற்புதமாக விவரித்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட நூல்களைப் பற்றி மீடியாக்கள் வாயே திறக்காது.

பாரத தேசத்திற்கும் தர்மத்திற்கும் எதிராக ஊடகத்துறை எத்தனை முற்றிக் கிடக்கிறது என்பது புரிகிறது.

“எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் கால் செருப்பை அவர்கள் நாக்கால் சேவிக்க வேண்டும்!” என்று வெறி பிடித்து அலையும் இரண்டு மதங்கள் கொடுமையையும் மதமாற்றம் எனும் தொற்று நோயையும் பரப்பி வந்தாலும் அதனை தடுக்க இயலாமல் இருக்கிறோம். நம் மீது தாக்குதல் நடத்தினாலும் எதிர்க்காமல் இருக்கிறோம்.

தேசப் பிதா காந்தி மகாத்மாவைக் கொலை செய்த மனிதன் கோட்சே மன்னிக்கத் தகுந்தவன் அல்ல. அந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது கொடூரமே!
இந்த நாடு அவன் கூறிய காரணங்களையும் பதில்களையும் கூட வெளியே வரவிடாமல் அமுக்கி விட்டு அவனைத் தூக்கில் ஏற்றியது.

அவனுடைய செயலை நாம் அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவனுடைய அபிப்ராயங்களை அன்றைய அரசாங்கம் வெளியே வரவிடவில்லை. பின்னர் தடையை நீக்கிய பிறகு அந்த காகிதங்கள் பிரசுரிக்கப்பட்டன.

அவற்றை இன்றைய தலைமுறை படிக்க வேண்டும். அன்றைய பிரிவினை, அதன் பின் நிகழ்ந்த கோரத்தாண்டவம், மதத்தின் பெயரால் நாடு துண்டாடப்பட்டது, இம்சையே வடிவமாக கொண்ட மதம் ஹிந்து இனத்தை அடியோடு அழித்தது, பிசாசு போன்ற கொடூரத்தன்மை… இவையெல்லாம் பிற்கால தலைமுறைக்குத் தெரியவிடாமல் பல ஆண்டுகளாக ஓட்டு வங்கி அரசியல் அரசாங்கங்கள் ஜாக்கிரதை எடுத்துக்கொண்டனர்.

கோட்சே செய்த தவறை மன்னிக்காவிட்டாலும் அவன் எடுத்துரைத்த வாதங்களை பூமியில் புதைக்க கூடாது. சுயநலத்திற்காக மறைக்கக்கூடாது.

அவனுடைய ஆவேசம் இந்து மதத்துடையது அல்ல. அன்றைய பிரிவினை அவனுடைய இங்கிதத்தை வீழ்த்திவிட்டது.

அந்தத் தவறை ஹிந்து மதத்தின் மேல் சுமத்தி, “முதல் ஹிந்து தீவிரவாதி” என்று தற்போது பேசும் தேசிய எதிர்ப்பாளர்களின் உத்தேசம்தான் என்ன?

இந்துக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்! நம் இருப்பிற்கு ஆபத்தைக் ஏற்படுத்தி… அந்த முயற்சியில் நாட்டு மரியாதையையே கெடுக்க நினைப்பவர்களிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும்! சர்வ மதத்தையும் பொறுத்துக் கொள்வதோடு நம் தர்ம பிரதிஷ்டையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்!!

(ருஷிபீடம் ஜூன் 2019 மாத இதழ் தலையங்கத்தின் தமிழ் வடிவம்)

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...