அரசியல் பாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது... உண்மையைப் போட்டுடைத்த...

பாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி!

ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி…

-

- Advertisment -

சினிமா:

திறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்!

ஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.

அது கொடுத்தால் தான் வருவேன்: அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி!

அது இல்லாமல் கண்டிப்பாக புரோமோஷன் பணிகளை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

இந்தியன் 2 கிரேன் விபத்து: என் ஆழ்ந்த அனுதாபங்கள்: கமல் ட்விட்!

.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.
-Advertisement-

ரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்? விளக்கமளித்த ஐஆர்சிடிசி!

காசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்

கரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து!

இப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்

மக்கள் வரிப்பணத்தில்… பிரசாந்த் கிஷோருக்கு இசட் பாதுகாப்பு!

மக்கள் வரிப்பணத்தில் ..Z பிரிவு கமாண்டோக்களின் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு!

தான் வக்கீலானது அம்பேத்கர் போட்ட பிச்சை என்பாரா ஆர்.எஸ்.பாரதி?! ஆனால் மோடி சொன்னார்!

ஆதிதிராவிடர்களை நீதிபதியாக ஆக்கியது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்.பாரதி..இது திமுகவிற்கு புதிதில்லை.

ஆ..! அன்னாந்து பார்க்க வைக்கும் தங்கம் விலை!

திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

பணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்!

பணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் 2: கிரேன் இயக்கியவர் தலைமறைவு!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்திற்கு காரணமாக இருந்த கிரேன் இயக்கிய நபர் தலைமறைவானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்?

மகாசிவராத்திரியின் சிறப்பான நியமங்கள் உபவாசமும் கண்ணுறங்காமையும். இந்த உறங்காத விரதம் என்பது மகா சிவராத்திரிக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது.

அவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி - கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல்...

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியானது.

கல்லறைக்குள்… ‘அமைதிப் பூங்கா’: காரணம் திமுக.,-அதிமுக.,!

வெறும் 40 லட்சம் முஸ்லீம்கள் உள்ள மாநிலத்தில் நீதிமன்றத்தின் எதிர்ப்பையும் மீறி, காவல்துறை அனுமதியளிக்காத நிலையில்.. ஒரு போராட்டத்தை, பேரணியை முஸ்லீம்கள் நடத்துகிறார்கள் என்றால்.. அதற்கு ஒன்று மட்டும் காரணி இல்லை.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிலை அமைத்து… வெள்ளிக்கிழமை பூஜை செய்து… இப்படி ஒரு அதி தீவிர பக்தர்?!

தெலுங்கானாவில் ட்ரம்பின் தீவிர பக்தர் ஒருவர், ட்ரம்பின் சிலை அமைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசமிருந்து பூஜை செய்கிறார்.

கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்!

சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.
- Advertisement -
- Advertisement -

“ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி… அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்..

அரசியல்வாதிகளில் சிரமப்படுபவர்களும் இருக்காங்க.. பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸாவும் இருக்காங்க… யாரா இருந்தாலும் சரி.. அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போகணும்” என்று ராதாரவி உண்மையை போட்டு உடைத்து உள்ளது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

நடிகர் ராதாரவி இப்போது ஐக்கியமாகி உள்ளது பாஜக.,வில்! வெளிப்படையாக பேசும் பழக்கம் உள்ள ராதாரவி போது பாஜக குறித்து வெளிப்படையாகப் பேசி பாஜகவில் உள்ள தொண்டர்களின் சிலரின் அனுபவங்களை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார்

ராதாரவி அப்படி ஒன்றும் பாஜகவில் இல்லாததை பற்றியோ பாஜகவுக்கு இல்லாத குணத்தை பற்றியோ பேசி விடவில்லை அன்று முதல் இன்று வரை அந்தக் கட்சி எப்படி உள்ளதோ அதைத்தான் வெளிப்படுத்தி யிருக்கிறார் ராதாரவி

சென்னையில் கல்தா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.. இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

என்னை பொறுத்தவரைக்கும், காலை தொட்டு கும்பிடுவதே தப்பு.. 5 படங்கள் தயாரித்திருக்கிறேன். ஆனால் இப்போது படம் தயாரிக்க பயமாக இருக்கு.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்க்க வருபவர்கள் யாரும் செல்போனை கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டால் நல்லா இருக்கும்.. அப்படி செய்தால் ஒரு படம் 3 காட்சிகள் வரை நன்றாக போகும்.

இந்தப் படத்தில் ஒரு சீனில், “அரசியல்வாதிகளா எல்லாரையுமாடா சாவடிப்பீங்க” என்று ஒரு டயலாக் இருக்கு.. மக்கள் தான் எல்லாரையும் சாவடிக்கிறாங்களே தவிர அரசியல்வாதிகள் கிடையாது.. மக்களுக்கு எந்த இடத்தில் தட்டி கேட்க வேண்டும், எதை கேட்க கூடாதுன்னு தெரியல… பக்கத்து மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வந்து குப்பைகளை கொட்டுவதை வைத்து படம் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டைரக்டரை நான் பாராட்டுகிறேன்.

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எதுக்காக ஓட்டு போட 2, 3 ஆயிரம் தர்றாங்க? என் இலவசங்கள் தர்றாங்க.. உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே, ஏன் ஓட்டுக்கு காசு தர வேண்டும் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் எல்லாம் யோசித்தீர்கள் என்றால் படத்தில் வருவதுபோன்று குப்பைகளை கொட்டாமல் பார்த்துக் கொள்ளலாம். எதற்கெல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து வாங்குகிறோம்…

ஆனால், குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே? குப்பை கொட்டுவதை சொல்வதால் அதிமுக அரசை திட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம்..

கடந்த 50 வருஷமாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம்… யார் இந்த தெருவை சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அவங்களுக்குதான் தான் ஓட்டு என்று சொல்லி பாருங்கள். எல்லா தெருக்களும் சுத்தமா இருக்கும்.

சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதின்னு காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகள் படுகின்ற கஷ்டம் நமக்குதானே தெரியும்..

ராதாரவி கட்சி மாறிவிட்டார்.. பணம் வாங்கிவிட்டார்ன்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி. அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்…

அதனால் எல்லா அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இல்லை, சிரமப் படுபவர்களும் இருக்காங்க… பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸா இருக்கிறார்கள். .. ஆனா, யாரா இருந்தாலும் சரி.. அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போகணும்” என்றார்.

ராதாரவியின் இந்த பேச்சில் “எதுக்கெல்லாமோ கையெழுத்து வாங்கிறோம்” என்று சொல்லி திமுகவின் கையெழுத்து இயக்கத்தை சாடி உள்ளார்…

“50 வருஷமாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று அதிமுகவை வாரி இருக்கிறார்..

அடுத்து “தேங்காய் மூடி கட்சி” என்று பாஜக குறித்து பேசி உள்ளார்.. இன்று கட்சிகளுக்குமே ஆதாரங்களுடன் தொடர்பு இருக்கிறது அதாவது திமுக அதிமுக என்று மாறி மாறி பயணித்த ராதாரவி இப்போது பாஜகவில் இருக்கிறார் எனவே பாஜ.,கட்சிக்காரர்கள் ராதாரவியின் பேச்சுக்கு தங்களது கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,976FansLike
214FollowersFollow
768FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

பலாச்சுளை பொரியல்

வெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.

பிடிக்காதவங்களுக்கும் பிடிக்கும் இந்த புளிச்சேரி!

வேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்… புளிசேரி தயார்!

கப்பங்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ்!

அதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |