“ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி… அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்..
அரசியல்வாதிகளில் சிரமப்படுபவர்களும் இருக்காங்க.. பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸாவும் இருக்காங்க… யாரா இருந்தாலும் சரி.. அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போகணும்” என்று ராதாரவி உண்மையை போட்டு உடைத்து உள்ளது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
நடிகர் ராதாரவி இப்போது ஐக்கியமாகி உள்ளது பாஜக.,வில்! வெளிப்படையாக பேசும் பழக்கம் உள்ள ராதாரவி போது பாஜக குறித்து வெளிப்படையாகப் பேசி பாஜகவில் உள்ள தொண்டர்களின் சிலரின் அனுபவங்களை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார்
ராதாரவி அப்படி ஒன்றும் பாஜகவில் இல்லாததை பற்றியோ பாஜகவுக்கு இல்லாத குணத்தை பற்றியோ பேசி விடவில்லை அன்று முதல் இன்று வரை அந்தக் கட்சி எப்படி உள்ளதோ அதைத்தான் வெளிப்படுத்தி யிருக்கிறார் ராதாரவி
சென்னையில் கல்தா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.. இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
என்னை பொறுத்தவரைக்கும், காலை தொட்டு கும்பிடுவதே தப்பு.. 5 படங்கள் தயாரித்திருக்கிறேன். ஆனால் இப்போது படம் தயாரிக்க பயமாக இருக்கு.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்க்க வருபவர்கள் யாரும் செல்போனை கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டால் நல்லா இருக்கும்.. அப்படி செய்தால் ஒரு படம் 3 காட்சிகள் வரை நன்றாக போகும்.
இந்தப் படத்தில் ஒரு சீனில், “அரசியல்வாதிகளா எல்லாரையுமாடா சாவடிப்பீங்க” என்று ஒரு டயலாக் இருக்கு.. மக்கள் தான் எல்லாரையும் சாவடிக்கிறாங்களே தவிர அரசியல்வாதிகள் கிடையாது.. மக்களுக்கு எந்த இடத்தில் தட்டி கேட்க வேண்டும், எதை கேட்க கூடாதுன்னு தெரியல… பக்கத்து மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வந்து குப்பைகளை கொட்டுவதை வைத்து படம் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டைரக்டரை நான் பாராட்டுகிறேன்.
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எதுக்காக ஓட்டு போட 2, 3 ஆயிரம் தர்றாங்க? என் இலவசங்கள் தர்றாங்க.. உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே, ஏன் ஓட்டுக்கு காசு தர வேண்டும் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் எல்லாம் யோசித்தீர்கள் என்றால் படத்தில் வருவதுபோன்று குப்பைகளை கொட்டாமல் பார்த்துக் கொள்ளலாம். எதற்கெல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து வாங்குகிறோம்…
ஆனால், குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே? குப்பை கொட்டுவதை சொல்வதால் அதிமுக அரசை திட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம்..
கடந்த 50 வருஷமாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம்… யார் இந்த தெருவை சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அவங்களுக்குதான் தான் ஓட்டு என்று சொல்லி பாருங்கள். எல்லா தெருக்களும் சுத்தமா இருக்கும்.
சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதின்னு காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகள் பட