19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் காதலர்கள் தம் காதலை வெளிப்படுத்துவார்கள். ஒருவருக்கொருவர் கிரீட்டிங் கார்டுகளும் பரிசுகளும் இனிப்புகளும் பூச்செண்டுகளும் பரிமாறிக் கொள்வார்கள் .
முன்பு ரோம் நகரத்தில் படைவீரர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை இருந்தது. ஆனால் செயின்ட் வேலன்டைன் என்ற சாது இவர்களுக்கு விவாகம் செய்வித்தார். அதனால் அவரை அரசர் சிறையிலடைத்து தூக்கிலிட்டார். கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த வேலன்டைன் என்ற பெயருடைய இன்னொரு சன்யாசிக்குக் கூட இந்த கொண்டாட்டத்தோடு தொடர்பு இருப்பதாக கூறுவார்கள். அதனால் வேலன்டைன் என்ற பெயருள்ள ஒரு கிறித்துவ தியாகிகளின் நினைவாக இந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் .
அதிகமாக காதலர்கள் இந்த தினத்தை கொண்டாடுவதால் காதலர் தினமாக அழைக்கப்படுகிறது.
இன்றைய தினம் உலக அளவில் பல நாடுகளில் காதல் ஜோடிகள் சுதந்திரமாக திரிவார்கள்.
இது வெளிநாட்டு கலாச்சாரத்தை நம் மீது திணிக்கும் முயற்சி என்றும் பரிசுகளையும் கிஃப்ட்களையும் அதிகமாக வாங்குவதற்காக செய்யும் வியாபார தந்திரம் என்றும் இன்னொரு கோணத்தில் பார்க்கப்படுகிறது.
இது கலாச்சார உலகமயமாக்குதல் காரணமாக மேற்கத்திய நாடுகளின் முதலீட்டாளர்கள் செய்துள்ள ஆபத்தான சதித் திட்டமாக பார்க்கப்படுகிறது.
கிறிஸ்மஸ் அன்று ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் கிரீட்டிங் காடுகளுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உலகளவில் கிரீட்டிங் கார்டு களுக்காக செலவழிக்கும் பண்டிகையாக வாலென்டைன் டே நிலவுகிறது . ஒரு பில்லியன் கிரீட்டிங் கார்டு களுக்கு மேலாக இன்றைய தினம் விற்கப்படுகிறது.
இந்த பண்டிகை இந்தியாவில் நம் பண்பாட்டிற்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. கிரீட்டிங் கார்டுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதோடு நிற்காமல் ஆணும் பெண்ணும் பப்புகளில் சேர்ந்து நாட்டியமாடுவதும் மது அருந்துவதும் கூட செய்வதால் நம் பண்பாட்டிற்கு எதிராக பார்க்கப்படுகிறது.