சியாம பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர் இருவரின் பாதையில் இந்தியா நடை போடும்: மோடி!

புது தில்லி: டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப் படுகிறது. அவரது பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, சியாமபிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அவரது பிறந்த நாளில் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பாதத்தில் சிரம் பணிவதாகக் குறிப்பிட்டார்.

ஒரு சிறந்த கல்வியாளராக ஒரு மிகச் சிறந்த நிர்வாகியாக, இந்திய சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட ஒரு போர்வீரராக அவர் என்றென்றும் நினைவு கூரப் படுவார் என்று குறிப்பிட்டார் மோடி.