spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்... உண்மைகள்! (பகுதி -35)

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்! (பகுதி -35)

- Advertisement -

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“Year calculation & claims of antiquity by Indians is baseless – இந்தியர்களின் காலக் கணக்கீடும் புராதனத்தன்மையும் ஆதாரங்கள் அற்றது”.

இந்தியர்கள் வைதிக கிரியைகளில் கூறும் சங்கல்பம் என்ன?

ஸ்ரீ மஹாவிஷ்ணோராஜ்ஞாய ப்ரவர்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்வீதிய பரார்த்தே… பார்திவ, அனந்த, கூர்ம, ப்ரம்ம வராஹ, ஸ்வேத வராஹ, ப்ரளய பாத்ம, சாவித்ர, கல்பானாம் மத்யே ஸ்வேத வராஹ கல்பே –

ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்தம, தாமச, ரைவத, சாக்ஷுஷ, வைவஸ்வத, சூர்ய சாவர்ணி, அக்னி சாவர்ணி, ப்ரம்ம சாவர்ணி, ருத்ர சாவர்ணி, தக்ஷ சாவர்ணி, இந்த்ர சாவர்ணி, வேத சாவர்ணாக்ய சதுர்தச மன்வந்தராணாம் மத்யே, வைவஸ்வத மன்வந்தரே, சப்தவிம்சதி மஹா யுகேஷு யா தேஷு,
அஷ்டாவிம்சதமே மஹாயுகே, அஷ்டாவிம்சதி சஹஸ்ரான்வித சப்ததச லக்ஷாப்தே –

க்ருதயுகே, யா தே, ஷ்ண்ணாவதி சஹஸ்ரான்வித த்வாதச லக்ஷாப்தே த்ரேதாயுகே யா தே, சதுஷ்ஷஷ்டி சஹஸ்ரான்வித அஷ்ட லக்ஷாப்தே த்வாபரயுகே யா தே, த்வாத்ரிம்ஸ சஹஸ்ரான்வித சதுர்லக்ஷாப்தே கலியுகே ப்ரதம பாதே –

யுதிஷ்டிர, விக்ரமார்க, சாலிவாஹன, விஜயாபினந்தன, நாகார்ஜுனாதி சகானாம் மத்யே சாலிவாஹன சகே –

பார்ஹஸ்பத்ய, சௌர, சாந்த்ர, சாவன நாக்ஷத்ராதி மானாந்தர்கத சாந்த்ரமானேன பிரபவாதி, ஷஷ்டி சம்வத்ஸராணாம் மத்யே… சம்வத்ஸரே –

இவ்விதமான காலக்கணக்கு கிறிஸ்தவ அரசர்களுக்கும் மேதாவிகளுக்கும் ருசிக்கவில்லை. இதற்குக் காரணம் ஒன்றுதான். பைபிளில் சிருஷ்டி தொடங்கியது கிமு 4004 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி என்று இருப்பதால். இந்த ஆதாரமற்ற பொய்க் கணக்குகளின்படி பூமியின் மேல் 6024 ஆண்டுகளுக்கு முன்பு எதுவும் இருப்பதற்கு வழி இல்லை. உண்மையில் பூமி என்பதே இருக்கக் கூடாது.

கிறிஸ்தவ மத நூலில் வர்ணித்தபடி கடவுள் ஆறு நாட்களில் படைப்பைச் செய்தாராம். முதல்நாள் வெளிச்சம். இரண்டாம் நாள் ஆகாயம். மூன்றாம் நாள் காய்ந்த பூமி (ட்ரை லேண்ட்), நான்காம் நாள் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள், ஐந்தாம் நாள் நீர் உயிரினங்கள் பறக்கும் பறவைகள், ஆறாம் நாள் ஆடம் (மனிதர்கள்), பிற உயிரினங்கள், ஏழாம் நாள் ஓய்வு.

இந்தியர்கள் குறிப்பிடும் கலியுகத்தின் ஆரம்பத்தை சிருஷ்டியின் ஆரம்பமாக இவர்கள் எடுத்துக் கொண்டார்கள் போலும்…! எந்த ஒரு ஆதாரமுமம் இல்லாத, விஞ்ஞானமற்ற காலக் கணக்கை கிறிஸ்தவ அரசர்கள் பிரசாரம் செய்தார்கள்.

(சூரிய சித்தாந்தம் படி இந்த மஹா யுகத்தில் பால்குன மாதம் அமாவாசை வியாழக்கிழமை இரவு கிபி 310ம் ஆண்டு, பிப்ரவரி 17 அன்று கலியுகம் ஆரம்பமானது).

இதனால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்பட்டன?

சுமார் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு முழுவதும் பொய் என்று நினைப்பதால் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை (அதாவது இவ்வாறு நடந்தது என்று கூறும் சரித்திர நூல்களை) நடக்கவே நடக்காத வெறும் கற்பனைக் கதைகளாக பிரசாரம் செய்தார்கள். (இந்த விவரங்கள் சென்ற பகுதிகளில் கொஞ்சம் தெரிந்து கொண்டோம்). இந்திய வரலாற்று ஆசிரியர்கள் சிலர் இதுவே உண்மை என்று நம்பினார்கள்.

நம் தேசம் கிறிஸ்தவ அரசர்களின் கபந்தக் கரங்களில் அடிமையாக இருந்த காலத்தில் கலியுகம், விக்கிரம சம்வத், சாலிவாகன சகாக்களை வேண்டுமென்றே வழக்கத்திலிருந்து நீக்கினார்கள். ஹிந்துக்களில் பலருக்கும் இந்த கணக்குகள் குறித்து புரிதலே இல்லை என்றால் வியப்பு எதுவும் இல்லை. நம் தேச சரித்திரத்தில் முக்கிய்மான சாம்ராட்டுகள் விக்ரமன், சாலிவாஹனர். இந்த இரு அரச பரம்பரையினரும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின்படி உண்மையில் பிறக்கவே இல்லை.

பைபிள் கூறியது என்பதால் கிறிஸ்துவுக்குப் பின், கிறிஸ்துவுக்கு முன் என்ற ஒரு விஞ்ஞானமற்ற முறை நம் மேல் திணிக்கப்பட்டது.

பூமி தட்டையாக இருப்பதாக எவ்வாறு நம்பச் செய்தார்களோ அதே போல் பூமி 6024 ஆண்டுகளுக்கு முன் உண்டாகவே இல்லை என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் அறிவியல் சாஸ்திரம் பூமியின் வயது 4.5-4 பில்லியன் ஆண்டுகள் என்று நிரூபித்தது. இந்தியர்களின் காலக்கணக்கு இதனுடன் சரியாகப் பொருந்துகிறது.

சுவாமி விவேகானந்தர் கூறியபடி, “நூதன அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் நம் சனாதன தர்மத்திற்கு சான்றுகளாக இருக்கும்”.

*சரஸ்வதி நதி புராணக் கற்பனை என்று எழுதிய போலி சரித்திர ஆசிரியர்களின் வாய்கள் மூடும்படி திரு. வாகங்கர், திரு. யுஆர் ராவு போன்ற அறிவியல் அறிஞர்கள் சரஸ்வதி நதியின் சுற்றுப் பிரதேசத்தை பற்றி பல பரிசோதனைகள் செய்தனர். தொல்லியல் அறிவியலில் முன்னிலை வகிப்பவரான திரு. வாகங்கர் சரஸ்வதி நதி 19,000 ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது என்ற உண்மையை நிரூபித்து வெளியிட்டார்.

எவ்வாறு கங்கை-யமுனை நதிக் கரைகளில் தெய்வீக கோவில்கள் உள்ளனவோ அதே போல் சரஸ்வதி நதி சுற்றுப் புறத்திலும் 1,400க்கு மேலாக புண்ணிய க்ஷேத்திரங்கள் இருந்தன என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இவற்றின் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதில் திரு.வாகங்கர் செய்த ஆராய்சிகளின் காரணமாக பாரத தேசத்தின் புராதனத் தன்மை பற்றிய ஆதாரங்கள் கிடைத்தன. அதுமட்டுமன்று… திரு வாகங்கர் மத்தியபிரதேஷில் உள்ள ‘பீம்பைட்கீ’ என்ற குகையில் வரையப்பட்ட வண்ண வண்ண சித்திரங்களை வெளிச்சத்திற்கு எடுத்து வந்தார். இவற்றைக் கொண்டு சித்திரம் வரைவதில் தேர்ந்த நாகரிக மனிதன் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தான் என்பது நிரூபணம் ஆகியது. இப்போதும் சிதையாத வண்ணங்களில் மனிதர்கள், விலங்குகளின் சித்திரங்கள், குதிரைமேல் அமர்ந்துள்ள வேட்டைக்காரன் போன்ற சித்திரங்களை அங்கு காணாலாம். இந்த குகைகள் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமசேனனின் பெயரில் அழைக்கப்படுவதுகூட மகாபாரத வரலாறு உண்மையென்று நிரூப்பிக்கிறது. இந்த குகைகள் UNESCO வால் அங்கீகரிக்கப்பட்டன.

*ஹவாபிகன்ஞ் அருகில் மலைகள், குகைகளில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்ததாக சான்றுகள் கிடைத்தன.

*தெலங்காணா கரீம்நகர் மாவட்டத்தில் மனித உடல் சமாதிகள் சில வெளிப்பட்டன. இவை எல்லாம் ‘ப்ரீ ஹிஸ்டாரிக்’ அதாவது வரலாற்றுக்கு எட்டாத முற்காலத்தைச் சேர்ந்தவை என்று மட்டுமே வரலாற்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

ஆந்த்ரோபாலாஜி என்ன கூறுகிறது?

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் யுரேசியா பகுதிகளில் ஒரு ஆதி மானுட இனம் இருந்தது என்றும் அவர்களுக்கு ‘நியான்டெர்டல்’ என்ற அறிவியல் பெயர் இருந்தது என்றும் ஆந்த்ரோபாலஜிஸ்டுகள் தெரிவிக்கிறார்கள். இந்த மனித இனம் தட்பவெட்பம் அனுகூலமில்லாத காரணத்தால் நோய்க்கு ஆளாகி அழிந்தது என்று அவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திடமான உடலோடு உயரமாக இருந்தார்கள் என்பதும் அவர்களின் ஜீன்ஸ் இப்போதைய ஆசியா தேச மக்களுக்கு உள்ளது என்பதும் அவர்கள் செய்த பரிசோதனையின் சாரம். இந்த ‘நியான்டெர்டல்’ இனம் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மனித இனம் வாழ்ந்ததென்றும் அவனுக்கு ‘நியான்டெர்டல்’ இனத்தோடு ஏற்பட்ட கலப்பால் மரபணுப்படி ஒற்றுமை உள்ள இனம் ஏற்பட்டதென்றும் கூடஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அப்படியிருக்கையில் பைபிள் சொல்லும் படைப்புக் கொள்கை பொய் தானே!


(source:- ருஷிபீடம் செப்டம்பர் 2020)


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe