மூலிகை இட்லி
தேவையான பொருட்கள்
உளுந்து -100 கிராம்
கொண்டைக்கடலை – 200கிராம்
வேர்கடலை – 200 கிராம்
சாம்பார் வெங்காயம் – 6
பச்சைமிளகாய் – 3
கொத்துமல்லி தழை – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை
மேற்சொன்ன பொருட்களைப் புடைத்து சுத்தம் செய்து சுத்தமான தண்ணீரில் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
கொண்டைக்கடலை,வேர்கடலை,உளுந்து இவை மூன்றும் வறுக்காத ,உடைக்காத பச்சையானதாக பார்த்து வாங்க வேண்டும். ஊறவைத்த 34 மணிநேரத்தில் இவைகள் மூன்றும் முளைக்கட்ட தொடங்கிவிடும். அந்த சமயத்தில் உளுந்து,கொண்டைக்கடலை, வேர்கடலை இவை மூன்றையும் எடுத்து சேர்த்து சிறிது வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் இட்டு சந்தனம்போல் பக்குவம் வரும்படி அரைத்து எடுக்கவேண்டும்.
அரைத்த பயறு மாவுடன் ஒரு ‘கப்’ புளித்த தயிரை கலந்து சேர்த்து நன்றாக கலக்கிவிட வேண்டும். தொடர்ந்து அதனுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் இவைகளை ஒரே அளவில் எடுத்து ’பொட்டிப்பொடியாக‘ வெட்டி தாயாராக உள்ள அரைத்த மாவுடன் சேர்த்து கலக்கிவிடவேண்டும். (இவைகளை எண்ணெய்,கடுகு இட்டு தாளித்தும் போடலாம்)
தொடர்ந்து தேவையானஅளவு கல் உப்பு, கொஞ்சம் மஞ்சள்தூள் இவைகளையும் கலந்து ‘இட்லி‘ பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்தால், புரதச்சத்து மிகுந்த இட்லிகள் கிடைக்கும்