சேமியா பனீர் க்ரிஸ்பி பால்ஸ்
தேவையானவை:
வேக வைத்த சேமியா – அரை கப்,
பனீர் – 100 கிராம்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பனீரைத் துருவி, அதனுடன் வேக வைத்த சேமியா, இஞ்சித் துருவல், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு சோள மாவு சேர்த்து, கையில் உருட்டும் பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும். எளிதில் செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ் இது.