அனாவசியமாக தன் மீது துர் பிரச்சாரம் செய்துவரும் மீடியா நிர்வாகத்தின் மீது மான நஷ்ட வழக்கு போடுவேன் என்று கூறிய துணை முதல்வர் அம்ஜத் பாஷா அரசாங்கத்தின் தரப்பில் அந்த சானல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தில்லி இஸ்லாமிய பிரார்த்தனை கூட்டத்துக்கு நான் போகவில்லை என்று நிரூபித்தால் அந்த மீடியா நிர்வாகத்தை மூடுவார்களா என்று சவால் விட்டார் துணை முதல்வர். ஒரு மீடியா நிர்வாகம் தன் மீது வேண்டுமென்றே தீய பிரச்சாரம் செய்து வருகிறது என்று எரிந்து விழுந்தார் ஆந்திரா துணை முதல்வர் அம்ஜத் பாஷா.
அந்த மீடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடப்பா மாவட்டம் எஸ்பிஐ சந்தித்து புகார் அளித்தார். தன் மீது தீய பிரச்சாரம் செய்த மீடியா நிர்வாகத்தின் மீது மான நஷ்ட வழக்குத் தொடுப்பேன் என்று எச்சரித்தார். அரசாங்கத்தின் தரப்பில் மீடியா மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.
துணை முதல்வர் ஹோதாவில் உள்ள தன் மீது இதுபோன்ற தீய பிரச்சாரம் செய்வது மிகவும் கொடுமையானது என்றார். ஒருவேளை தான் அச் சபைக்கு செல்லவில்லை என்று நிரூபித்தால் அந்த மீடியா நிர்வாகத்தை மூடி விடுவார்களா என்று கேள்வி எழுப்பினார் அம்ஜத் பாஷா.
துணை முதஷ்வராக உள்ள தனக்கு புரோட்டோகால் இருக்கும் என்றும் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் ஆன் ரெக்கார்டில் இருக்கும் என்றும் கூறினார். இந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி டெல்லி சென்றேன் என்றார் . அது கூட முஸ்லிம்களுக்கு மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி அளித்த 4 சதவிகிதம் ரிசர்வேஷன் வழக்கு விஷயமாக கலந்துரை யாடுவதற்காக சென்றேனென்றும் மார்ச் 5ல் இருந்து 26 வரை கடப்பாவில் தான் இருந்தேன் என்றும் விளக்கமளித்தார். மார்ச் 27 அன்று காபினெட் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் சொன்னார். 28 அன்று கடப்பா வந்தேன் என்று கூறினார்.
இரு தெலுங்கு மாநிலங்களிலும் டில்லி மர்கஸ் நிஜாமுதீன் மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பற்றி ஒரே பரபரப்பாக உள்ளது. இரண்டு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 ஆயிரம் பேருக்கும் மேலாக டெல்லிக்கு சென்று வந்ததாக தெளிவாகியுள்ளது. அவர்களில் நிறைய பேருக்கு கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. தெலுங்கானாவில் ஒரேடியாக 6 பேர் இறந்துபோனார்கள்.
அதேபோல் மர்கஜ் சென்று வந்தவர்களின் விவரங்களைத் தேடிவரும் அதிகாரிகள் அவர்களை ஐசொலேஷனுக்கு அனுப்பி வருகிறார்கள். இது இப்படி இருக்கையில்…
ஆந்திரா துணை முதல்வர் அம்ஜத் பாஷா கூட டெல்லி பிரார்த்தனைக்கு சென்றார் என்று இன்னும் சில மீடியாக்களிலும் பிரச்சாரம் நடந்து வந்தது. அதனால் அவர் எதிர்வினை ஆற்றி தெளிவுபடுத்தினார். தான் டெல்லி போய் வந்ததை பற்றி நடக்கும் பிரச்சாரத்தில் உண்மை இல்லை என்று அம்ஜத் பாஷா கூறினார்.
எல்லோ மீடியா தன் மீது குற்றம் சுமத்துகிறது என்றும் மார்ச் 2ம் தேதி டெல்லிக்கு சென்றேன் என்றும் கூறினார். கொரோனா தொற்று போன்ற ஆபத்தான சூழ்நிலையில் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய மீடியா நிர்வாகங்கள் அரசியல் செய்கின்றன என்று துணை முதல்வர் ஆத்திரமடைந்தார். அரசாங்கத்தையும் முதலமைச்சர் ஜகனையும் தன்னையும் இக்கட்டில் மாட்ட வேண்டும் என்பதற்காகவே எல்லோ மீடியா சதித் திட்டம் தீட்டுகிறது என்றார்.