December 7, 2024, 7:10 AM
25.9 C
Chennai

உணவோடு தொடர்புடைய பழமொழிகள்!

உணவோடு தொடர்புடைய பழமொழி! **********************************

1.அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.
2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன் உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும்.
3. இன்று விருந்து நாளை உபவாசம் இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான்.
4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய். மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும்.
6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை. எருதுக்கு உணவாக அமையும் பிண்ணாக்கு போல, ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. குறைந்த விலையில் நல்வாழ்வு தரக்கூடியது.
7. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே. பொன்னால் அழகு சேர்க்க முடியும். பொடிக் கீரைதான் ஆரோக்கியம். அதிலும் பொன்னாங்கன்னிக்கீரை தங்கச் சத்து உடையது.
8. வாழை வாழ வைக்கும்: வாழைப்பழம் உடலைத் தேற்றும் வாழைக்காய் மந்தம் என்றாலும் அளவறிந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டம் தரும். சிறுநீரகக் கல்லை வாழைப்பூ நீக்கும். சிறுநீரை வாழைத்தண்டு பெருக்கும்.
9. வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை: உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை வெங்காயம் கட்டுப்படுத்தும்.
10. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி நிவாரணியாக செயல்படும்.
11. உடம்பை முறித்துக் கடம்பில் போடு உடல் வலியைப் போக்கி ஓய்வையும் உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்பு மரத்திற்குத்தான் உண்டு.
12. அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்: திடீர் வண்டுக்கடி, ஒவ்வாமை என்ன கடித்ததென்றே தெரியாமை இவற்றிற்கு அறுகம்புல் ஒரு நச்சு நீக்கி, இது விஷத்தை முறிக்கும் தன்மையுடையது.
13. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு: பெண்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் அவர்களின் இடைப்பகுதி பெருத்து அழகுகெட்டுவிடும்.
14. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்ரை. கரும்பில் இருந்துதான் சர்க்கரை என்றல்ல இலுப்பைப் பூவையும் சர்க்கரையாக பயன்படுத்து வோர் உண்டு

ALSO READ:  தீபாவளி ஸ்பெஷல்: சென்னையில் இருந்து குமரி, செங்கோட்டைக்கு ரயில்கள்!
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் டிச.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

உதவி வேண்டுவோர் 1800 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவி கோரும் பெண்கள் 155370 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பஞ்சாங்கம் நவ.30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

‘அதானியைக் கைது செய்’ என்று சொல்லும் ராகுலிடம் சில கேள்விகள்!

கவுதம் அதானி ஒரு முன்னணி இந்தியத் தொழிலதிபர். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்