வீட்டில் இருக்கும் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொறித்தபடி டி.வி பார்க்க ….. டீ ஸ்நாக்ஸ்:
டைமண்ட் கட்ஸ்!
தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
ரவை – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு ரவை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
பின்பு அதனுடன் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சோம்பு, உப்ப சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர் மாவை பூரிக்கு திரட்டுவதை விட சிறிது கணமாக திரட்டி கத்தியால் குறுக்கும் நெடுக்கும் கோடிட்டு சிறு டைமண்ட் வடிவ வில்லைகளாக வெட்டி எடுக்கவும். .
எல்லா மாவையும் இப்படியே செய்து வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் எண்ணெயில் வெட்டி வைத்த வில்லைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.