December 7, 2025, 5:02 AM
24.5 C
Chennai

அதி வேக ஆண்மைக்கு.. இந்த சூரணத்தை வீட்டில செஞ்சு சாப்பிடுங்க!

horse strenth

ஏழு மூலிகைகள் ஏழு வகையான இயற்கைப் பொருள்கள் உள்ளன. அவற்றில் ஆறு மூலிகைகள் மற்றும் அதனுடன் ஏழாவதாக பனங்கற்கண்டு சேர்த்து சூரணமாக தயாரித்து சாப்பிட வேண்டும்.

1. நிலப் பனங்கிழங்கு
2. தண்ணீர்விட்டான் கிழங்கு
3. இலவம் பிசின்
4. நெருஞ்சில் விதை
5. நீர்முள்ளி விதை
6. பெரும் பூனைக்காலி விதை
7. பனங்கற்கண்டு

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் கீழே காண்போம். அதையடுத்து சூரணம் செய்யும் முறையையும் பார்க்கலாம்.

1. நிலப் பனங்கிழங்கு பனங்கிழங்கு
உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ரத்தத்தைப் பெருக்கி தாது உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். உடலுறுவில் தளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் உஷ்ணம், காய்ச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது இனிப்பு சுவை கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆண்மையைப் பெருக்கும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.

3. இலவம் பிசின்

இலவம் பிசின் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல மூல நோய்க்கும் ஆண்மையைப் பெருக்குவதிலும் மிக முக்கியப் பணியாற்றுகிறது இந்த இலவம் பிசின்.

4.நெருஞ்சில் விதை
நெருஞ்சில் விதை சூரணத்தை மோரில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நிற்கும். சிலருக்கு சிறுநீர் கடுப்பு மற்றும் ரத்தம் வடிதல் ஏற்படும். இதற்கு நெருஞ்சிலை இடித்து சாறெடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். தசைகளை வலுவாக்கி, நரம்பு மண்டலத்தை துடிப்புடன் வைத்திருக்கும்.

5. நீர்முள்ளி விதை
நீர்முள்ளி விதையை பொடியாகவுா அல்லது மாத்திரைகளாகவோ சாப்பிட்டு வந்தால், ஆண்மை விருத்தி ஏற்படும். விந்து நீர்த்துப் போகாமல் கெட்டிப்படும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் தாது விருத்தியை அதிகரிக்கும்.

6.பெரும் பூனைக்காலி விதை
வெல்வெட் பீன் என்று அழைக்கப்படுகிறது. பூனைக்காலி செடிகள், வேலிகளில், சாலையோரங்களில், சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகை கொடி. இதனுடைய பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் நரம்புகளை வலுவாக்கி, ஆண்மை பாதிப்புகளைச் சரிசெய்கிறது. மலச்சிக்கலையும் போக்கும்.

7. பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு வைட்டமின் நிறைந்தது என்பதால், நம்முடைய முன்னோர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டை தான் பயன்படுத்தினார்கள். சளி, இருமலுக்கு நல்லது. வாய் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது. உடல் சோர்வைப் போக்கும் சிறுநீரகக் கல் பிரச்சியையைத் தீர்க்கும்.
சூரணம் செய்முறை
பனங்கற்கண்டை தவிர மேற்கண்ட அனைத்து பொருள்களையும் வெள் நிற காட்டன் துணியில் சுற்றி, ஆவியில் வேக வைக்க வேண்டும். ஒரு 20 நிமிடம் கழித்து வெளியில் எடுத்து, மற்றொரு ஈரமில்லாத துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலிலேயே நன்கு உலர்த்தி, பின் பனங்கற்கண்டையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தேன் அல்லது நெய்யில் ஒரு ஸ்பூன் அளவு குழைத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். குதிரை மாதிரி பலம் பெறுவீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Related Articles

Popular Categories