
முருங்கைப்பூ துவட்டல்
தேவையானவை:
புதிதாகப் பறித்த முருங்கைப்பூ (சுத்தம் செய்தது) -1 கப், தேங்காய் துருவல் -4 டீஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் -10, பச்சைமிளகாய் -2.
தாளிக்க:
எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு -அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -1.
செய்முறை:
முருங்கைப்பூவை அலசிப் பிழிந்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாகக் கீறவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு தாளிப்பவற்றை போட்டு, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பிறகு முருங்கைப்பூவை நன்கு சேர்த்து வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து வேகவிடவும். அத்துடன் உப்பு சேர்த்து, சேர்ந்தாற்போல வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக சாப்பிட வெகு சுவையாக இருக்கும் இந்த துவட்டல். உடலுக்கு மிகவும் நல்லது.