
தமிழக முதல்வர் தொடங்கிய புதிய இணையதளம்..!
தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் பொருட்டு புதிய இணைய தளம் ஒன்றை ( tnprivatejobs.tn.gov.in) இன்று தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த இணையத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்து அப்டேட் செய்வர்.
அதே போன்று இளைஞர்கள் தங்களின் சுயவிவரத்தை அப்டேட் செய்து கொள்வார்கள். தகுதியான நபர்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்து கொள்ள இந்த இணையம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
முதல்வரின் டுவிட்டரில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.