அற்புதமான சைட் டிஷ்: கூழ் வற்றல் மசாலா!

Published:

kuzhvatral

கூழ் வற்றல் மசாலா
தேவையானவை:
கூழ் வற்றல் -25,
பெரிய வெங்காயம் -2,
தக்காளி -1,
மிளகாய்தூள் -ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்,
மல்லித் தூள் -அரை டேபிள்ஸ்பூன், தூள்
உப்பு -தேவைக்கேற்ப,
கரம் மசாலா தூள் -கால் டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் -1 சிட்டிகை,
சோம்பு -அரை ஸ்பூன்,
எண்ணெய் -6 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் -1 டீஸ்பூன்.

செய்முறை:

வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கிலும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கூழ்வற்றலை சுடுதண்ணீரில் வேகவைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்துவிடவும்.

வாணலியில் எண்ணெயைச் சுடவைத்து சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும். அருமையான சைட் டிஷ் இது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img