October 22, 2021, 2:10 pm
More

  ARTICLE - SECTIONS

  இது ஒண்ணு போதும்.. காய்ச்சல், இருமல், நோய்த்தொற்று, தொண்டை வலி,சுவாச பிரச்சனை, சளி, கிருமிநாசினி, அம்மாடியோவ்.. என்னெல்லாம் நன்மை!

  star anise

  புதிய நோய்களைப்பற்றி அறியும்பொழுது, எங்கே நமக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான். எலிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் டெங்கு காய்ச்சல் புதிய வைரஸ் தொற்று போன்றவற்றைப் பற்றிய செய்திகள் காய்ச்சலைவிட வேகமாக பரவுகிறது.

  இத்தகைய நோய்களை தடுக்க முந்தைய காலங்களில் ஆறுகள், குளங்கள், கேணிகளில் மூலிகை வேர்களை ஊறவைத்தும், யாகங்கள், ஹோமங்கள் செய்து காற்றுமண்டலத்தை தூய்மை செய்தும், மூலிகை ஊறிய நீரை பிறர் மேல் தெளித்தும் அருந்த கொடுத்தும் நோய் வராமல் தடுத்துக் கொண்டனர்.

  ஆனால் மாறி வரும் நவீன யுகத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலும், போக்குவரத்து எளிதானதாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பும் அதிகரித்துவிட்டது.

  ஹோமங்கள், யாகங்களில் பயன்படுத்தப்பட்ட மூலிகை பொருட்கள் கிருமிநாசினி செய்கை உடையதுடன் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பரவாமல் தடுக்கும் ஆற்றலையும் கொண்டிருந்தன.

  இவை ஹோமம், யாகத்தில் பயன்படுவது மட்டுமின்றி, அசைவ உணவுகளை உண்ணும்பொழுது ஜீரணிக்கச் செய்யவும் பயன்படும் அன்னாசிப்பூ என்னும் தக்கோலம் தொற்று நோய்க்கு காரணமான பல வகையான புளூ வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

  இலிசியம் வீரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மேக்னோலியேசியே (இலிசியேசியே) குடும்பத்தைச் சார்ந்த இந்தச்செடிகளின் பூக்கள் அன்னாசிப்பூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படுகின்றன.

  இதன்பூ மற்றும் பழங்களிலுள்ள டிரான்ஸ் அனித்தோல், பெனிக்குலின், ஈஸ்ட்ராகோல், பைசாபோலின், பார்னிசின், கேரியோபிலின், நிரோலிடால் போன்ற சத்துகள் சுரத்தை குறைக்கும் தன்மையுடையன.

  வேதி தொழிற்சாலைகள் மூலமாக அன்னாசி பூவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சிக்கிமிக் அமிலமானது எச்1என்1 வகை வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடைய காரணத்தால் ஆசல்டாம்விர் என்ற வைரஸ் எதிர் உயிரி மருந்தில் ஒரு உள்வேதிப்பொருளாக இணைக்கப்படுகிறது.

  இந்த மருந்தின் ஆரம்பக்கட்ட ஆய்வின்பொழுது சிக்கிமிக் அமிலம் அன்னாசிப்பூவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. தற்சமயம் பன்றிக்காய்ச்சலை தடுக்க வழங்கப்படும் டாமிபுளூ மாத்திரை தயாரிக்க மூலப்பொருளாக விளங்கியது அன்னாசிப்பூதான் என்பது பாரம்பரிய மருத்துவத்தின் சான்றாகும்.

  சுவாசப்பாதையில் ஏற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிப்பூவை பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசப்பாதையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

  அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட தொற்று காய்ச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல், தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும்.

  செரிமானக் கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றிலுள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிப்பூ பிரியாணி போன்ற செரிக்கக்கடினமான உணவுகள் தயார் செய்யும் பொழுது மசாலாவாக அரைத்து சேர்க்கப்படுகிறது

  அன்னாசிப்பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வு, தலைமுடி வறட்சி, சரும நோய்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக, இதன் எண்ணெயில் Onithol என்கிற முக்கியமான மூலக்கூறு உள்ளது. இதை உடலில் தசைப்பிடிப்புகள் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தசைப் பிடிப்புகள் நீங்கும்.

  முகப்பருக்கள் தொந்தரவுகள் இருந்தால் அன்னாச்சிப் பூவை பொடியாக்கி, தேன் கலந்து முகத்தில் பூசினால் உடனடியாக குணமடையும். பெண்கள் தங்களுடைய கூந்தலை பராமரிப்பதற்கு இதன் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

  அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும்போது அவர்கள் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள்.

  அதிகமான உணவு எடுத்துக் கொண்டவர்கள் ஜீரணமாகாமல் சிரமப்படுவதுண்டு. அவர்கள் தற்போது கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயனம் கலந்த பானங்களைப் பயன்படுத்தாமல் அன்னாசிப்பூவினை பொடி செய்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடியாக அஜீரண கோளாறு நீங்கி நிம்மதியாக உணர்வார்கள்.

  இது வயிற்றில் ஏற்படக்கூடிய வாயுத்தொல்லையை நீக்குகிறது. படபடப்பு உள்ளவர்கள் அன்னாசிப் பூவினை பயன்படுத்துவது நல்லது. படபடப்பை நீக்க அன்னாசிப்பூ தீர்வாக அமையும். அதுபோல வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு இயல்பாக மன அழுத்தம் இருக்கும். அவர்களும் அதிலிருந்து விடுபட அன்னாசிப்பூவினை பயன்படுத்துவது நல்லது.’’

  மனதில் படபடப்பு, பயம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் ஒரு கப் அன்னாசிப்பூ தேநீர் குடித்துவரலாம். இவை மன அழுத்தம் படபடப்பு பிரச்சனைகளை குறைக்கும். குழந்தைகள் மந்தமாக இருந்தால் அவ்வபோது அன்னாசிப்பூவை நீரில் கொதிக்க வைத்து குடிக்க வைத்தால் சுறுசுறுப்பாக வளைய வருவார்கள். உற்சாகமாக இருப்பார்கள். சோர்வும் தெரியாது.

  அன்னாசிப்பூவினை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராகத் தயாரித்து அருந்துவதால் நல்ல செரிமானத்திற்கு உதவி செய்கிறது, மந்தத் தன்மையை போக்குகிறது, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு உடனடி நிவாரணியாக இருக்கிறது. அன்னாசிப்பூ + இஞ்சி + ஜீரகம் சேர்ந்த தேநீர் செய்து குடித்தால் ஜீரண மண்டலத்தை பலப்படுத்துவதுடன் ஜீரணம் தொடர்பான மற்ற கோளாறுகளும் நீங்கும்.

  அன்னாசிப்பூவோடு சீரகம், மிளகு, தேன் கலந்து தேநீர் செய்து பயன்படுத்தும்போது சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும். நுரையீரலுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்யலாம். ஈரலை பற்றிய வைரஸ் நோய்களுக்கு மருந்தாக அன்னாசிப்பூ இருக்கிறது!’’

  அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்.

  சளி, இருமல், காய்ச்சல் மூன்றும் சேர்ந்துவரும் காலத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரோடு அன்னாசிப்பூ 5 கிராம் சேர்த்து சிறுதுண்டு இஞ்சியை நறுக்கி சேர்த்து கால் டீஸ்பூன் சீரகம் கலந்து கொதிக்க வைத்து மிளகுத்தூள் சிட்டிகை ,இனிப்புக்கு தேன் கலந்து குடித்துவந்தால் காய்ச்சல் காணாமல் போகும்.

  சுவாசப்பாதையில் பிரச்சனை, நுரையீரல் பாதிப்பு, சளி தொந்திரவு, அஜீரண கோளாறு இருப்பவர்களும் தினம் ஒருமுறை இதை குடித்துவந்தால் நிவாரணம் பெறலாம்.

  சுவாசப்பாதையில் ஏற்படும் நுண்கிருமிகள் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும் அதை வெளியேற்றவும் அன்னாசிப்பூவை பொடித்து தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.

  சுவாசப்பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அன்னாசிப்பூவை நீரில் கொதிக்கவைத்து சுண்டிய பின்பு வடிகட்டி சாப்பிடுவதற்கு முன்பு குடித்துவந்தால் சுவாசப்பிரசனை படிப்படியாக நீங்கும். தொண்டைவலி குணமடையும். சளி கட்டியாக இருந்தாலும் அதை கரைத்து வெளியேற்றும். இருமலும் படிப்படியாக குறையும்.

  அன்னாசிப் பூ மார்பகங்களின் அளவைப் பெரிதாக்கும். அன்னாசிப்பூ ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும். உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமானால், மார்பகங்கள் தானாக பெரிதாகும். அதற்கு அன்னாசிப்பூவை டீ வடிவில் உட்பொள்வது நல்லது. ஆனால் இந்த டீயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

  அன்னாசிப்பூவை பெண்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது பெண்களுடைய மாதவிடாய்க்கு காரணமாக இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன்கள் சுரப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

  மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, வயிற்றுப்பிடிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

  அன்னாசிப்பூவை பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் தேன் கலந்து அன்னாசிப்பூ பவுடரை கலந்து குடித்தால் தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-