தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

Published:

coronavirus
coronavirus

தமிழகத்தைச் சேர்ந்த 2094 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 84 பேருக்கு .தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றைய .கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,174 ஆக அதிகரித்துள்ளது 

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரையிலான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25 ஆயிரத்து 463 மாதிரிகள் சோதனை இடப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 627 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2174.  அவர்களில் ஆண்கள் 1367, பெண்கள் 805, திருநங்கையர் 2 பேர்.

தமிழகத்தில் இன்று 48 பேர் தொற்று நோய் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர் இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.

 சென்னையில் அதிகபட்சமாக 1276 பேருக்கு தொற்று  இன்று உறுதி செய்யப்பட்டது சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 61 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 90 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 பேர் மற்றும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேருக்கும் மற்றும் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று  கொரோனாவில் இருந்து விடுபட்டு 842 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனோவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியோர்  எண்ணிக்கை 27,624 

Related articles

Recent articles

spot_img