
பாகிஸ்தானில் தெலுங்கு இளைஞன் கைது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது! அது கிட்டத்தட்ட விமானி அபிநந்தன் பிடிபட்ட போது நிகழ்ந்தவைகளைப் போல் வெளிக்காட்டப் பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தெலுங்கு இளைஞர் கைதானது குறித்து தெலங்கானா மாநிலத்தில் கவலை ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பாலைவனத்திற்குள் உள்நோக்கத்துடன் நுழைந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவை சேர்ந்த இரு இளைஞர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்.
இளைஞர்கள் இருவரும் பாஸ்போர்ட் விசா இல்லாமல் தம் நாட்டில் நுழைந்து உள்ளார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பாவல்பூரில் வைத்து கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் போலீசார் தம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ஹைதராபாத் இளைஞனின் பெயர் பிரசாந்த் என்று தெரிகிறது. அவரோடு தொடர்புடைய ஒரு வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். வீடியோவில் இளைஞன் மிகவும் தைரியமாக பேசுவது தெரிகிறது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சுற்றி வருகிறது.
” மம்மி டாடி நல்லா இருக்கீங்களா? இங்கே எல்லாம் நல்லா இருக்கு! இப்போ என்னை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருக்காங்க. எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிந்த பின்னர் தான் இங்கு அழைச்சிட்டு வந்தாங்க. இங்கே இருந்து சிறைக்கு அனுப்புவாங்க. அங்கே இருந்து இந்திய தூதரகத்துக்கு செய்தி அனுப்புவாங்க. அப்போது உங்களோடு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்து விடுவாங்க!” என்று வீடியோவில் பிரசாந்த் கூறுகிறார்.
இந்தியா, பாக். இடையே கைதிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இருக்கும் என்றும் அவ்வகையில் தான் விடுதலை ஆகலாம் என்றும் பிரசாந்த் கூறியுள்ளார்.
இந்திய தூதரகத்துக்கு செய்தி கிடைத்தவுடனை ஜாமீன் எடுப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என்றும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விடுதலை ஆகும் வாய்ப்பு உள்ளது என்றும் தன் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவன் பேசியுள்ளான்.
சிறையில் இருக்கும் போதும் எப்படிப்பட்ட பயமோ நடுக்கமோ இன்றி பேசிய பிரசாந்த் இந்தியர்களின் இதயத்தைக் கவர்ந்து உள்ளான்.
” வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா? நான் என் சொந்த மொழியில் பேசலாமா?” என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்… சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.
ஆனால் இந்த வீடியோ எப்போது பதிவு செய்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. பிரசாந்த் உடன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாரிலால் என்னும் இளைஞரும் பாகிஸ்தானால் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார். அவர்கள் இருவரும் நலமாக தாய்நாடு திரும்ப வேண்டும் என்று இப்போது பலரும் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர்.