சவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்!

சற்றுமுன் தமிழகம்
stalin ramadoss - 2026

பஞ்சமி நிலம் குறித்த சர்ச்சையில், திமுக.,வின் அரசியலை ஏற்று, அவர்கள் என் 1000 ஏக்கர் நிலம் குறித்து கூறியுள்ள சவாலை ஏற்கிறேன். அதை அவர்கள் நிரூபித்தால், அவற்றை அவர்களுக்கே கொடுத்துவிடுகிறேன் என்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் ராமதாஸ்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…

  1. முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.அது தான் அறம்.அது தான் நேர்மை!
  2. முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.