ஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை!

Published:

jagan mother vijayamma - 2026

ஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசு ஒய்எஸ் விஜயம்மா சாரிடபுள் ட்ரஸ்டிற்கு தடை விதித்துள்ளது. ஒய்எஸ் ஜெகன் மீது மத்திய அரசு கத்தியை தீட்டுகிறது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நிபந்தனைகளை கடைபிடிக்காத என்ஜிஓக்களுக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

வெளிநாட்டு நிதிகளின் சட்டங்களை மீறியதால் தெலங்காணாவைச் சேர்ந்த 90, ஆந்திராவைச் சேர்ந்த 168 என்ஜிஓக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது .

அதில் ஒய்எஸ் ஜகனின் தாயார் பெயரில் உள்ள ஒய்எஸ் விஜயம்மா சாரிடபுள் ட்ரஸ்டும் ஒன்று. அதனால் சோசியல் மீடியாவில் இந்த செய்தி வைரலாக மாறியது.

ysr cong reddy - 2026

ஃபாரின் கன்ட்ரிபியூஷன் ரெகுலேஷன்ஸ் சட்டம் 2010 (எஃப்ஸிஆர்ஏ) வின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத் செகந்திராபாத்களில் நடக்கும் சர்ச்சுகள் மற்றும் கல்வி நிலையங்களை கேன்சல் செய்து உள்ளது.

இந்த லிஸ்டில் சேவாபாரதி, ஹைதராபாத் ஆர்கேடியோசிஸ் எடுக்கேஷனல் சொசைட்டி, சத்திய ஹரிச்சந்திரா பவுண்டேஷன் ஆகியவை உள்ளன.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

ஆந்திராவில் ரூரல் எடுகேஷன்ஸ் & டெவலப்மென்ட் சொசைடி, ராயபாடி சாரிடபுள் சொசைடி, ஒய்எஸ் விஜயம்மா சாரிடபுள் ட்ரஸ்ட், பிலடெல்பியா ஜியான் மினிஸ்டரீஸ், அருணா மகிளா மண்டலி போன்ற என்ஜிஓக்களின் பதிவுகளை ரத்து செய்தது.

வெளிநாட்டு நிதிகளோடு தொடர்புடைய வருடக் வரவு செலவுக் கணக்கு விவரங்களை அளிக்காததே எஃப்சிஆர்ஏ பதிவு ரத்துக்கு முக்கிய காரணம்.

எஃப்சிஆர்ஏயின் கீழ் வெளிநாட்டு நிதிகளின் விவரங்களை என்ஜிஓக்கள் வருடாந்திர வரவு செலவுக் கணக்கு தாக்கலில் சமர்பிப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img