
கர்னூல் மாவட்டத்தில் கிராம ரெவின்யூ அதிகாரியின் காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ.
கர்னூல் மாவட்டத்தில் இரு விஆர்ஓ.,க்களுக்கு இடையே தகராறூ ஏற்பட்டது. அப்போது ஒரு விஆர்ஓ இன்னோரு விஆர்ஓ.,வின் காதைக் கடித்துவிட்டார். கர்னூல் தாசில்தார் அலுவலகத்தில் இந்த சம்பவம் கடந்த ஞாயிறு மதியம் நடந்தது.
‘சுங்கேசுல’ கிராம ரெவின்யூ அதிகாரி வேணுகோபால் ரெட்டியும் ‘ஜோஹராபுரம்’ கிராம ரெவின்யூ அதிகாரி கிருஷ்ணதேவராயரும் பரஸ்பரம் அடித்துக் கொண்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.
வேணுகோபால் ரெட்டி கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.
ஒரு விவசாயியின் நிலம் தொடர்பான விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணதேவராயர் கேட்டுக் கொண்டார். பல நாட்களாக விவரங்களை அப்டேட் செய்யாமல் வேணுகோபால் ரெட்டி தங்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறார் என்று குற்றம் சுமத்தினார். இந்த விஷயத்தில் எம்ஆர்ஓ முன்னிலையிலேயே கிராம ரெவின்யூ அதிகாரிகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் தான் எப்போதோ அப்டேட் செய்து விட்டதாக வேணுகோபால்ரெட்டி கூறவே இருவரும் உடனுக்குடன் சிஸ்டத்தில் செக் செய்து பார்த்தபோது அதில் விவசாயியின் பெயர் தவறாக இருந்தது. அதனால் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாக கிருஷ்ணதேவ ராயர் சந்தேகம் தெரிவித்தார்.
தாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.
இது குறித்து… கிருஷ்ணதேவ ராயர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வேணுகோபால் ரெட்டி என் மீது செருப்பை வீசி எறிந்தார். அது என்னை தாக்கியது. அவர் முகம் என் அருகில் இருந்ததால் காதை கடித்து விட்டேன். எனக்கும் தான் தோளிலும் நெஞ்சிலும் அடிபட்டுள்ளது என்றார்.
வேணுகோபால் ரெட்டியின் காது பிய்ந்து ரத்தம் கொட்டியது. சண்டையிடுவது தங்கள் நோக்கம் அல்ல என்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கிருஷ்ணதேவராயர் கூறினார்.
இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தார்கள்!