
கணவனை நம்பி வரும் திருமணமாகி வரும் பெண்கள் இன்று வரதட்சணை கொடுமை உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
கணவர்களின் அன்பற்ற போக்கு திருமணம் தாண்டி பிற பெண்களுடனான தொடர்பு போன்றவைகளாலும் மாமியார் மாமனார் போன்ற புகுந்த வீட்டு உறவு சிக்கல்களாலும் தற்கொலை தீர்வு என்று முடிவுக்குக் தள்ளப்படுவதையும் நாம் நாள்தோறும் காண்கிறோம். சில வழக்குகளில் கொலையை தற்கொலையாக மாற்றி அமைக்கப்படுவதையும் விசாரணையில் தெரியவருகிறது.
இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழன் பிரசன்னா- நதியா தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் எருக்கஞ்சேரி அருகே இந்திராநகரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மனைவி நதியாவிற்கு இன்றைய தினம்பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடி அதனை பேஸ்புக்கில் போட வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு கணவர் கொரோனா காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் அதனால் மனம் உடைந்த நதியா இன்று காலை10:00 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவின் தந்தையிடம் போலீசார் புகாரினை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் இதுதான் காரணமா? இல்லை வேறு ஏதும் குடும்பதகராறு காரணமா? என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.