
விசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.
கிழக்கு கடற்படை தலைமையில் வைஸாக் நேவி மராத்தான் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஞாயிறு காலை உற்சாகமாக நடைபெற்றது.
மராத்தானை கிழக்கு கடற்படை கமாண்டிங் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மாடே உடன் சேர்ந்து மாநில போலீஸ் பாஸ் கௌதம் சவாங்க் தொடங்கி வைத்தார். கரேஜ் ரன் என்ற பெயரில் 42.2 கிலோமீட்டர் வரை ஓடிய மாரத்தானில் 458 பேர் அதலெடிக்குகள் பங்கேற்றனர்.
டெஸ்டினி ரன் என்ற பெயரில் 21.1 கிலோமீட்டர் வரை ஓடிய ஆப் மாரத்தானில் 2739 பேர் அதலெடிக்குகள் உற்சாகமாக பங்கேற்றனர். அதேபோல் பிரெண்ட்ஷிப் ரன் என்ற பெயரில் 10 கிலோ மீட்டர் ஓடிய பந்தயத்தில் 5850 பேர் பங்கேற்றனர். 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10061 பேர் பங்கேற்றனர்.
மராத்தான் மென் கேட்டகிரியில் பெலிக்ஸ் செரிமாத் ராப் வென்றார்.
மோஹித் ராதோர் ரன்னரப் ஆக வந்தார்.
ஹாஃப் மராதானில் நிகோடிமஸ் கிப்டுகட் வென்றார் .
மோசஸ் கிப்டானியா ரன்னரப் ஆக வந்தார்.
மராத்தான் மகளிர் பிரிவில் எட்ரேகெனட் பெலிடே வென்றார்.
செல்லி ஜெபிவுட் ரன்னரப் ஆக வந்தார்.
ஹாஃப் மராதான் பெண்கள் பிரிவில் கரென் ஜெபெட்
வென்றார்.
புலன்பால் ரன்னரப் ஆக வந்தார்.