
ஹைதராபாத் பெண் டாக்டர் படுகொலையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சைபராபாத் போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளனர்.
போலீஸ் கஸ்டடியில் எடுத்த முதல் நாள் செர்லபல்லி சிறையிலேயே குற்றவாளிகளை விசாரித்தனர். செல்போனை அந்தப் பெண்ணை எரித்த இடத்திற்கு அருகிலேயே புதைத்து வைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதோடு திசாவை உயிரோடுதான் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். விசாரணையின் போது அவர்கள் சற்றும் குற்ற உணர்ச்சியோ பச்சாதாபமோ இல்லாமல் நடந்து கொண்டதாக தெரிகிறது.
புதன்கிழமை மாலை போலீஸ் கஸ்டடிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வியாழக்கிழமை ஒருநாள் அவர்களை சிறையில் விசாரித்தார்கள்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவர்களை அந்தப் பெண் பலாத்காரம் செய்து உயிருடன் எரிக்கப் பட்ட இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். குற்றம் எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டவும், அடையாளம் காட்டவும் அழைத்துச் சென்றனர்.
பொதுமக்கள் பெரும் கொந்தளிப்புடன் இருப்பதால், அவர்களை சம்பவ இடத்துக்கு பகலில் அழைத்துச் செல்ல முடியாது என்பதால், சம்பவம் நடந்தது போன்ற இரவிலேயே அவர்களை அங்கு அழைத்துச் சென்றனர்.
குற்றவாளிகள் தப்பி ஓடும்போது என்கவுன்டர் செய்து சுட்டால் அது மனித மனித உரிமை மீறல் என்று சொல்லி சங்கங்கள் போர்க்குரல் எழுப்பும். ஆனால், இந்தச் சம்பவத்தில், குற்றவாளிகள் போலீசாரை தாக்கினர் என்றும் அவர்களிடமிருந்த துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தனர் என்றும் கூறப்படுகிறது.எனவே, தற்காப்புக்காக போலீசார் என்கௌன்டர் செய்ய நேர்ந்தது என்று கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை, அந்தப் பெண் கொல்லப் பட்ட அதே இரவு நேரத்தில் அந்தப் பெண் உயிரோடு தகனம் செய்யப்பட்ட பத்தாவது நாள் அவள் ஆத்மாவுக்கு சாந்தி காரியம் செய்யும் விதமாக…. சாந்தி சடங்காக இது நடத்தப்பட்டதாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.