சாலைகள், அமைப்புகள், அலுவலகங்கள், பகிரங்க பிரதேசங்களில் துப்புவது குற்றம் என்று தெலங்காணா அரசாங்கம் உத்தரவு வெளியிட்டுள்ள நிலையில் அதனை மறுத்து நடந்து கொள்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
புதிதாக அண்மையில் சாலையில் துப்பியதற்காக ஒரு இளைஞருக்கு அதிர்ச்சியளித்தனர் ஐதராபாத் போலீசார். ஹயத்நகர் செக்போஸ்ட் அருகில் ஒரு வாகனத்திலிருந்து சாலையில் துப்பியதற்காக அப்துல் மஜேத் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அதனை அடையாளம் கண்ட சரூர்நகர் போலீசார் அந்த இளைஞர் மீது செக்சன் 188, 269 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலங்காணா முழுவதும் கொரோனா பரவல் நாள் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில் மாநில அரசாங்கம் கடினமான தீர்மானங்களை எடுத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியே வந்தால் ஒவ்வொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் கூட மாஸ்க்குகள் அணியவேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளது. கிராமங்களிலுள்ள ஊழியர்கள் கூட மாஸ்க் அணிய வேண்டும் என்ற உத்தரவு அளித்துள்ளது. வெளியில் கிடைக்கும் மாஸ்களோடு கூட வீடுகளில் தயார் செய்த மாஸ்க்குகளை கூட அணிந்து கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளார்கள். சில மாநிலங்களில் மாஸ்குகள் அணியாமல் வெளியில் வந்தால் கைது செய்வதோடு கூட அபராதம் கூட விதிக்கிறார்கள். இப்போது அந்த லிஸ்டில் தெலங்காணாவும் உள்ளது.
தெலங்காணாவில் இன்று புதிதாக 16 கேசுகள் பதிவாகியுள்ளன. இதோடு மாநிலத்தில் மொத்தமாக கொரோனா கேசுகளின் எண்ணிக்கை 487க்கு சேர்ந்தது. இதில் 430 ஆக்டிவ் கேசுகள். 45 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்கள். ஆனால் இதுவரை மாநில அளவில் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஹைதராபாதில்தான் மிக அதிகமாக 179 கேசுகள் பதிவாகி உள்ளன. நிஜமாபாதில் 49 பாசிட்டிவ் கேசுகள். அதன்பின் ரங்காரெட்டி மாவட்டத்தில் 27 கேசுகள், வரங்கல் அர்பன் மாவட்டத்தில் 23, மேட்சல் மாவட்டத்தில் 21 கேசுகள் பதிவாகி உள்ளன.
எத்தனை பாசிடிவ் கேசுகள் பதிவானாலும் சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இனி மாநில அளவில் மேலும் 16 மாவட்டங்களில் பத்துக்குள் கேசுகள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரசை முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நோய் அடையாளம் காணும் பரிசோதனைகளுக்காக ஆறு லாப்கள் 24 மணி நேரமும் வேலை செய்கின்றன.
எத்தனை பாசிட்டிவ் கேசுகள் பதிவு ஆனாலும் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து உள்ளார்கள். அதேபோல் மருத்துவ சிப்பந்திகளுக்குத் தேவையான என்-95 மாஸ்க்குகள், சர்ஜிகல் மாஸ்க்குகள், ஹேண்ட் கிளௌசுகள், பிபிஇ கிட்கள் தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.
மறுபுறம் மாநில அளவில் லாக்டௌனை போலீசார் மேலும் கட்டுதிட்டமாக அமுல் படுத்துகிறார்கள்.