
சிறுமி ஒருவர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் போல வேடமிட்டு பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவிற்கு பயந்து பலர் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அரசும் ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தினமும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாலை 6 மணிக்கு செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு வருகிறார். அவர் இன்று என்ன சொல்லப்போகிறார் என அனைவரும் அவரது நேரலைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பீலா ராஜேஷ் போல ஒரு சிறுமி வேடமிட்டு பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் சேலத்ததை சேர்ந்த லோகனந்த ஸ்ரீ என்ற சிறுமி பீலா ராஜேஷ் போல உடை அணிந்து அவரது பாணியில் கையில் ஒருகாகிதம் ஒன்றை வைத்துக்கொண்டு கொரோனா தொடர்பான புள்ளி விபரங்களை வாசிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரால் சேர் செய்யப்படுகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்