
திருமலை திருப்பதியில் மொட்டை அடிக்கும் நிலையங்கள் மூடப்பட்டன…
இரண்டு மாதங்களுக்கு மேலாக நின்று போயிருந்த திருமலை ஸ்ரீவாரி தரிசனங்கள் ஆரம்பமாகின்றன. கொரோனா காரணமாக தரிசனங்களை நிறுத்தி வைத்த பின் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு ஜூன் எட்டாம் தேதி முதல் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
இதன்படி முதலில் சோதனை ஓட்டம் நடந்தது. சில தி தி தேவஸ்தான ஊழியர்கள் சமூக விலகலைக் கடைபிடித்து சுவாமியை தரிசித்தார்கள். இந்த விஷயத்தை திதிதே சேர்மன் ஓய்வி சுப்பாரெட்டி வெளியிட்டார்.
காலை ஊழியர்கள் 100 பேருக்கு சுவாமி தரிசனம் செய்வித்து ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேரை அனுப்பலாம் என்ற அம்சம் குறித்து பரிசீலித்ததாக அவர் கூறினார். காலை 8 மணி முதல் 10 மணி வரை உள்ளூர் வாசிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு சோதனை ஓட்டம் நடக்கும் என்றும் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யலாம் என்றும் முதலில் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்க நிபந்தனைகளுக்கு உட்பட்டு தரிசனங்கள் இருக்கும் என்றும் திதிதே வழிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, திருமலையில் தலைமுடியை சமர்ப்பிக்கும் நிலையங்களை தற்காலிகமாக மூடி விட்டதாக அறிவித்துள்ளார்கள். மற்றும் நான்கு பிரச்னைகளோடு கூடிய அம்சங்களை அடையாளம் கண்டதாகவும் ஒய்வி சுப்பாரெட்டி தெரிவித்தார்.
அன்ன பிரசாத கேந்திரம் அருகில் ஒவ்வொருவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தீர்த்தம் மற்றும் சடாரி ரத்து செய்வதாகவும் கூறினார்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என்றும் கன்டைன்மென்ட், ரெட் ஜோன் பகுதியிலுள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஒய்வி சுப்பாரெட்டி கூறினார்.