
செல்போனை பார்த்துக்கொண்டே ஒருவர் சாலையில் நடந்து வரும்போது கண நேரத்தில் அதை பறித்துக்கொண்டு திருடர்கள் டூவீலரில் தப்பிச்சென்றனர் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது
ஹைதராபாதில் உள்ள கிஷண்பாகில் வெள்ளிக்கிழமை நேற்று, நட்டநடு ரோட்டில், மதியத்தில் இரு திருடர்கள் மொபைல் போனை இளைஞர் ஒருவரிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு தப்பித்து ஓடினார்கள். இந்த சம்பவம் என்எம் குடா ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அருகில் நடந்தது.
ஒருவர் மொபைல் போனை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். அதற்குள் பைக்கில் வந்த இரு திருடர்கள் அவருடைய கையில் இருந்த மொபைல் போனை பிடுங்கிக்கொண்டு கண்மூடி திறப்பதற்குள் அங்கிருந்து தப்பித்து விட்டனர். அவர்களை அந்த இளைஞர் துரத்திச் சென்றாலும் பயனில்லாமல் போனது.
இந்த திருட்டுக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரமாக வைத்து போலீசார் திருடர்களைப் பிடிப்பதற்காக தேடி வருகிறார்கள்.