ஏப்ரல் 21, 2021, 9:37 காலை புதன்கிழமை
More

  ஸ்ட்ரெக்சரை தள்ள லஞ்சம்! 4 வயது சிறுவனே தாத்தாவை வைத்து தள்ளிய சோகம்! வைரல் வீடியோ!

  stacture

  மருத்துவமனை ஊழியர்கள் கேட்ட லஞ்ச பணத்தை தனது தாயால் தர முடியாததையடுத்து, விபத்தில் காயமடைந்த தன் தாத்தாவை சிகிச்சைக்காக ஸ்ட்ரெக்சரில் வைத்து, நான்கு வயது சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம், டியோரிய மாவட்டம், பர்ஹாஸ் பகுதிக்குட்பட்ட கௌரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெடி யாதவ். இரண்டு நாட்களுக்கு முன் சாலை விபத்தில் படுகாயமடைந்த இவர், கோராக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  அவருக்கு விபத்தில் காயங்கள் ஏற்பட்ட இடங்களில் தினமும் மருந்து (டின்ச்சர்) வைத்து, மருத்துவர்கள் சுத்தம் செய்து வருகின்றனர், டிரஸ்சிங் எனப்படும் இந்தப் பணியை செய்வதற்காக, யாதவை தினமும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இருந்து மருத்துவரின் அறைக்கு ஸ்ட்ரெக்கரில் அவரை படுக்கவைத்து அழைத்துச் செல்ல வேண்டும்.

  இந்தப் பணியை மேற்கொள்ள மருத்துவமனை பணியாளர்கள் (வார்டு பாய்) ஒவ்வொரு முறையும் லஞ்சம் கேட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் யாதவின் மகளிடம் வார்டு பாய்க்கு தர அந்தப் பெண்ணிடம் பணம் இல்லாததால், தமது தந்தையை தானே ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளிக்கொண்டு, மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

  தனது தாய் கஷ்டப்படுவதை பார்த்த, அந்த இளம்பெண்ணின் நான்கே வயதான மகன், தனது தாத்தா படுத்திருக்கும் ஸ்ட்ரெக்சரை தன் அம்மாவுடன் சேர்ந்து தள்ளிக் கொண்டு சென்றுள்ளான்.

  இந்த கொடுமையான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் காங்கிரஸின முன்னாள் தேசிய தலைவர் கேசவ் சந்த் யாதவ் உள்ளிட்டோர், தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

  இதையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய கோராக்பூர் மாவட்ட ஆட்சியர், நோயாளியிடம் லஞ்சம் கேட்ட வார்டு பாயை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »