modi in times now interview - 2026

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

Featured இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi in times now interview - 2026
#image_title

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

கேள்வி – நாங்கள் மோதி பக்தர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள்.  தடைவிதிக்கப்பட்ட 14 ஊடகவியலாளர்களில் நாங்கள் இருவரும் உண்டு.  

பதில் –14 பேர் பட்டியலுக்கு ஒரு அர்த்தம் உண்டு.   2014ஓடு தொடர்புடையது 14.   சிரிப்பு.   ஆகையால் 2024இலே மேலும் 10 இணையும்.  சிரிப்பு.

கேள்வி– எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பிரதமர் அவர்களே.   உங்களை எதேச்சாதிகாரி என்பவர்களும் கூட சுதந்திரமாகத் திரிகிறார்கள் எனும் போது நீங்கள் என்ன மாதிரியான எதேச்சாதிகாரி?   சிரிப்பு.   இறந்து போ மோதி என்பவர்களும் கூட சுதந்திரமாகவே திரிகிறார்கள்.  என்ன மாதிரியான எதேச்சாதிகாரம் இது?

பதில்– நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என் தாயைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை என் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து விட்டார்கள் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தினார்கள்,  ஆனால், அவர்கள் ஏற்படுத்திய எதேச்சாதிகாரி பிம்பத்தில் எல்லா கெட்ட வார்த்தைகளும் போய் அடங்கி விடும்.   என்ன செய்தாலும் நீங்கள் எதேச்சாதிகாரியே.

தாயில்லாக் குறையைத் தீர்த்து வைத்த நாட்டின் கோடானுகோடி தாய்மார்கள்

நான் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது… முதன்முறையாக, தாயின், ஆசிகளைப் பெற்றுச் செல்வோம் என்று சென்றேன்.  

நான்.. என் சகோதரன் வீடு சென்றேன்.  அம்மா எனக்கு வெல்லம் கொடுத்தாள்.   அப்போதிலிருந்து எத்தனை முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேனோ, அனைத்திற்கு முன்பாகவும் தாயின் பாதம் பணியச் சென்றிருக்கிறேன்.  வேட்புமனு தாக்க, செய்திருக்கிறேன்.  

அவர்களும் வெல்லம் அளிப்பார்கள்.  என் வாழ்க்கயின் முதல் தேர்தல் இது, இப்போது நான், தாயின் தாள் பணியாமல் செல்கிறேன்.  ஆனால், மனதில் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.   இன்று 140 கோடி மக்களின் கோடானுகோடி தாய்கள் இருக்கின்றார்கள்.  

அவர்கள்,  என் மீது நிறைய அன்பைப் பொழிந்திருக்கிறார்கள், ஆசிகள் அளித்திருக்கிறார்கள், அவர்களை நினைத்துக் கொண்டு, அதன் பிறகு, அன்னை கங்கை இருக்கவே இருக்கிறாள், அன்னை கங்கை இருக்கிறாள்.  

குறை என்னவோ இருக்கிறது!!!   அதே சமயம் கோடிக்கணக்கான தாய்களையும் பார்க்கிறேன்.   ஒருவேளை, உணர்வுரீதியாக, எனக்கு எப்போதுமே, சக்தியை அளித்து வருகிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.