
இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு சென்சார் போர்டு அதிர்ச்சி அளித்தது. ‘திஷா என்கௌண்டர்’ திரைப்படம் வெளி வருவது சந்தேகமே என்கிறார்கள்.
திஷா என்கவுன்டர் சினிமாவுக்கு சென்சார் சர்டிபிகேட் கொடுப்பதற்கு சென்சார் போர்டு நிராகரித்தது. அதனால் ராம் கோபால் வர்மாவின் சினிமா விடுதலையாவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தெலங்காணாவில் நடந்த திஷா சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த சினிமாவை தயாரித்துள்ளார்கள். சென்ற ஆண்டு வெளிவந்த திசா என்கவுண்டர் திரைப்பட டிரைலர்… சர்ச்சையை ஏற்படுத்தியது. திசா சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்… என்ற நிலையில், அந்த சம்பவத்தை வைத்து நாங்கள் எடுக்கவில்லை என்று அதை மறைக்க முயற்சி… செய்தார்கள்.
எப்போதுமே சர்ச்சைகளுக்கு ஆளாகும் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு சென்சார் போர்டு இப்போது அதிர்ச்சி அளித்துள்ளது. ராம்கோபால் வர்மாவின் மேற்பார்வையில் எடுக்கப் பட்டுள்ள இந்த திஷா என்கவுன்டர் சினிமாவுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு சென்சார் போர்டு கமிட்டி நிராகரித்தது.
ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்தைப் போலவே சம்பவங்கள் இந்த சினிமாவில் இருப்பதால் சென்சார் செய்வதற்கு கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நான்கு உறுப்பினர்கள் கொண்ட சென்சார்போர்டு திஷா என்கவுன்டர் சினிமாவை தள்ளுபடி செய்ததால் பட தயாரிப்பாளர்கள் ரிவிசன் கமிட்டியின் முன்பாக எடுத்துச் செல்ல உள்ளார்கள்.

இந்த சினிமா குறித்து திஷாவின் பெற்றோர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். உயர் நீதிமன்றத்தில் கூட புகார் அளித்துள்ளார்கள். இதனால் இந்த திரைப்படம் விடுதலை ஆவது குறித்து சந்தேகங்கள் உள்ளன.
ஹைதராபாத்தில் 2019 நவம்பர் 26ஆம் தேதி நடந்த திஷா வன்முறை கொலை வழக்கு சம்பவம், நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம். நான்கு பேர் காமப் பிசாசுகளாக, மிக மிகக் கொடூரமாக அந்த இளம்பெண்ணை வன்புணர்வு செய்து அதன் பின் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள்.
பின்னர் அந்த நான்கு குற்றவாளிகளையும் போலீசார் என்கவுன்டர் செய்தார்கள். ஆனால் இந்த சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு சினிமா எடுப்பதாக முதலில் அறிவித்த இயக்குனர் ராம் கோபால் வர்மா அதன் பிறகு தன் பேச்சை மாற்றினார்.
சினிமா டிரைலர் சென்ற ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வெளிவந்த பின் அதிலுள்ள காட்சிகளைப் பார்த்த திஷாவின் பெற்றோர் சினிமா குறித்து தம் அதிருப்தியை வெளியிட்டார்கள். ஏற்கெனவே பெண்ணை இழந்து துயரத்தில் நாங்கள் இருக்கும்போது இந்த சினிமாவும் அதற்கு வரும் காமெண்டுகளும் மேலும் எங்களை வருத்தத்தில் ஆழ்த்துகின்றது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த சினிமா வெளிவராமல் உத்தரவிடும்படி தெலங்காணா உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வேண்டினார்கள். இந்த சினிமாவை வெளியிடுவதா வேண்டாமா என்று கூற வேண்டிய பொறுப்பை சென்சார் போர்டுக்கு அளித்தது உயர் நீதிமன்றம். ஆனால் நீதிமன்றத் தீர்ப்புக்கு தாம் கட்டுப்பட்டு இருப்போம் என்றும் சென்சார் போர்டுக்கு திஷா என்கௌண்டர் சினிமாவை காட்டிவிட்டு, பின் திஷா மரணித்த தேதியில் நவம்பர் 26-ந்தேதி
நிச்சயமாக சினிமாவை வெளியிடுவோம் என்றும் ராம்கோபால் வர்மா கூறினார்.
இது திஷா பயோபிக் அல்ல என்றும் அவர் குறித்து சினிமா எடுக்கவில்லை என்றும் சொல்ல முயன்றார். அந்தப் பெண்ணின் பெற்றோரின் அனுமதியை நாங்கள் எதற்காகப் பெற வேண்டும் என்று வினா எழுப்பினார்.
கொரோனா கால பொது முடக்கத்தால், இந்த சினிமாவின் சென்சார் முடிவடையவில்லை. சினிமா வெளிவரவும் வாய்ப்பு அமையவில்லை. மொத்தத்தில் இப்போது சென்சார்போர்டு வரை சென்றபோது அவர்கள் அதை தணிக்கை செய்வதற்கு மறுத்துவிட்டார்கள்.
இந்த சினிமாவுக்கு ஆனந்த் சந்திரா இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நட்டி குமார் பிரதர்ஸ் இந்த சினிமாவை தயாரித்துள்ளார்கள்.