ஐயா.. பிப்.14 க்கு லாக் டவுன் போட்ருங்கய்யா..! எடப்பாடி செய்த காமெடி!

அடடே... அப்படியா? சற்றுமுன் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
edappadi-palanisamy-1
edappadi-palanisamy-1

தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முதல்வரின் பிரசாரத்தின் போது, இளைஞர்கள் சிலர், பிப்ரவரி 14ஆம் தேதி லாக்டவுன் போடுங்கய்யா… என்று கோரிக்கை வைத்தனர்.

இதைக் கேட்டு சிரித்த முதல்வர் பழனிசாமி, “உங்களது கோரிக்கையும் நிறைவேற்றப்படும்” என்று சிரித்துக் கொண்டே நகைச்சுவையாக பதில் அளித்தார்.

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக இளைஞர்களால் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் காதலர்கள் ஒன்றாக வெளியில் சென்று வருவர்.

இதைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே இளைஞர்கள் சிலர் முதல்வரிடம் கிண்டலாக கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக “உங்களது கோரிக்கையும் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

கொரோனா கால பொது முடக்கம், தொடர்ந்து, பள்ளி கல்லூரிகள் மூடல், பின்னர் அனைவரும் ஆல் பாஸ்… என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த பின்னர், கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு மவுசு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், இளைஞர் ஒருவரின் கோரிக்கையும் அதற்கு எடப்பாடியின் பதிலும் இப்போது பரபரப்பாகிவிட்டது.

இந்த வீடியோ இப்போது மீம் வடிவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.