கட்டுரை: செல்வநாயகம்
நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு விவகாரத்தை எதிர்த்தோ ஆதரித்தோ போராட்டம் செய்ய அனுமதிக்கலாமா? என்று நீதிமன்றம் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த வருடம் மத்திய அரசு அறிவித்த விவசாய சீர்திருத்தங்களை எதிர்த்து விவசாயிகள்-போர்வையில்-புரோக்கர்களும் அரசியல்வாதிகளும் தொடங்கிய போராட்டம் நேற்று ரத்தக்களறி ஆகியிருக்கிறது. தேர்தல் வரவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் 9 பேர் இறந்திருப்பதாக செய்தி.
இதில் பாஜக.,வைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நான்கு ‘விவசாயிகள்’ பாஜக.,வினரின் கார் ஏறி கொல்லப்பட்டதாகக் கூறப் பட்டாலும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இது பெருத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் ஒருவர் நிருபர்.
இறந்த பாஜக.,வைச் சேர்ந்தவர்களில் மூவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை அடித்துக் கொன்றவர்கள் சமாஜ்வாதி / காங்கிரஸ் கட்சியினர் என்பதும், உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20% பிராமண வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல பிண அரசியல் செய்யும் பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், ராகேஷ் திகாயத் எல்லாரும் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கே 144 தடை போட்டது யோகியின் உபி., அரசு. மேலும், உயிரிழந்த அத்தனை பேரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு + அரசுப் பணி அறிவித்தது. காயம்பட்டவர்களுக்கும் இழப்பீடு. பாஜக.,வினர் வந்த காருக்கு சொந்தமான பாஜக., உறுப்பினர் (மத்திய இணை அமைச்சரின் மகன்) மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சரைத்தான் குறி வைத்ததாகவும், அவர் அந்த வண்டியில் வராததால் தப்பித்தார் என்பதும் கூடுதல் செய்தி!
சினிமாக்களில் – கிளைமாக்ஸில் – எல்லாம் முடிந்த பின் போலீஸ் வந்து துப்பாக்கி எடுத்துச் சுடுவது போல இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இன்று:
1, மத்திய அரசு சட்டங்களுக்கு நாங்கள் இடைக்காலத் தடை விதித்திருக்கிறோம்.
2, போராளிகளுக்குப் போராடவும் அனுமதி கொடுத்தோம்.
என்று ஆரம்பித்து, முடிவில், “விவகாரத்தை நீதிமன்றம் விசாரிக்கும் போது, போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கலாமா? போராட்டத்தை அனுமதிக்கலாமா?” என்ற கேள்வியை நீதிமன்றமே எழுப்பி, அதை விசாரித்து தீர்ப்பளிக்க முடிவெடுத்துள்ளது.
இந்தப் போராட்டங்களுக்கு எதிராக மத்திய / உபி மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தும், “போராடுவது ஜனநாயக உரிமை” என்று கூறி அதற்கு அனுமதி அளித்தது நீதிமன்றம். விவசாயிகளுடன் பேச கமிட்டியும் அமைத்தது நீதிமன்றம்.
ஆனால், “அவர்களுடன் பேச மாட்டோம்…” என்று கூறிய போராளிகள் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏன் சுமத்தவில்லை என்பது பலரது கேள்வி!
இதற்கிடையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு இன்று அங்குள்ள உண்மையான விவசாயிகளை அடித்து துவம்சம் செய்திருக்கிறது! அது குறித்து, எந்த ஊடகமும் வாய் திறக்கவில்லை; காரணம், அது காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் என்பதால்.
சுப்பிரமணியசாமியும், அவருடன், வருண் காந்தியும் (சஞ்சய் காந்தி மகன்) தொடர்ந்து இந்த விவகாரத்திலும், உ.பி., முதல்வர் யோகியைக் குறிவைத்து சமூகத் தளங்களில் அரசியல் செய்து வருகின்றனர்.
இந்த விவசாயப் போராளிகள் பற்றிய டூல்கிட் விவகாரத்திலும், “டூல்கிட் வைத்து போராட்டம் (கலவரம்?) பண்ணுவது ஜனநாயக உரிமை” என்ற ரீதியில் நீதிமன்றம் அந்த விவகாரத்தைப் புறம் தள்ளியதும், போராளிகளைத் தொடர்ந்து வன்முறைக் களமாட நீதிமன்றமே அனுமதித்ததும், இந்திய நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ் போன்ற பொய்யர்களை அழைத்துப் பேச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பது எவருக்கும் பலனில்லாத உப்புச்சப்பில்லாத விஷயம்.
ஜனநாயகத்தை மீறி இவர்கள் செயல்படுகிறார்கள். ஜனநாயகத்தை மீற மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார் பிரதமர் மோதி. அவர் காரணமில்லாமல் முரண்டு பிடிக்க மாட்டார். பாகிஸ்தான் என்றால் குண்டு போட்டுவிடுவார். சீனன் என்றால், சப்பை மூக்கை உடைப்பார். ஆனால்… உள்ளூர் விவகாரங்களில் கணக்கு வேறாகவே இருக்கிறது.
Farmers Protest: Can Protests Be Allowed When The Matter Is Subjudice? Supreme Court To Examine
FarmersProtest : Supreme Court Issues Notice To 43 Protest Leaders In Plea Against Road Blockade
Lakhimpur Kheri Incident- When Such Events Happen, Nobody Takes Responsibility”: Supreme Court